விஜய்யுடன் ஆடிய நடனம்.. கலங்கும் திரிஷா.. நினைத்து பார்த்து ரொம்ப ஃபீல் செய்றாங்களே

சென்னை: விஜய்யும், திரிஷாவும் இதுவரை சேர்ந்து மொத்தம் ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்கள். ரசிகர்களின் ஃபேவரைட் ரீல் ஜோடியாக வலம் வந்த அவர்கள்; சமீப காலமாக விமர்சனங்களையும் சந்தித்துவருகிறார்கள். காரணம் சங்கீதாவின் விவாகரத்து விவகாரம். சூழல் இப்படி இருக்க விஜய்யுடன் ஆடிய நடனத்தை நினைத்து திரிஷா கலங்கியிருக்கிறார். அதுதொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

கில்லி படத்தில் விஜய்யும், திரிஷாவும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்ததால் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறினார்கள். அவர்கள் சேர்ந்து நடித்தால் ஹிட்டாகிவிடும்; அவர்கள் ராசியான ஜோடி என்ற பிம்பமும் திரைத்துறையில் உருவாக; திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய மூன்று படங்களில் வரிசையாக நடித்தார்கள். அவற்றில் திருப்பாச்சி மட்டும்தான் ஹிட்டடித்தது.

Trisha Gets Emotional Over Vijay Memory Ghilli Song Post Goes Viral
Photo Credit:

அப்போதே எழுந்த கிசுகிசு: அவர்கள் தொடர்ந்து சேர்ந்து நடித்ததால் இரண்டு பேர் பற்றியுமான கிசுகிசு அப்போதே வந்தது. முக்கியமாக இனிமேல் திரிஷாவுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என சங்கீதாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ஸ்ட்ரிக்ட்டாக விஜய்க்கு ரூல் போட்டதாகவும்; அதன் காரணமாகத்தான் லியோ படம் வரை சேர்ந்து நடிக்காமல் அவர்கள் இருந்தார்கள் என்றும் ஒரு பேச்சு உண்டு. சூழல் இப்படி இருக்க லியோ படத்தில் அவர்கள் சேர்ந்து நடிக்க தொடங்கியதுமே சங்கீதாவுக்கும், விஜய்க்கும் பிரச்னை ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Also Read
அசினோடு திரிஷாவுக்கு பிரச்னையா?.. விஜய்யுடன் நடித்தது காரணம்?.. அவங்களே என்ன சொல்லிருக்காங்க பாருங்க
அசினோடு திரிஷாவுக்கு பிரச்னையா?.. விஜய்யுடன் நடித்தது காரணம்?.. அவங்களே என்ன சொல்லிருக்காங்க பாருங்க

அப்படி செய்த திரிஷா - விஜய்: அதிலும், விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்ட சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டு வந்தது மேற்கொண்டு இந்த விஷயத்தில் பல சந்தேகங்களை கிளப்பியது. ஒருவேளை அவர்கள் பற்றி இத்தனை வருடங்களாக வந்த வதந்திகளும், கிசுகிசுக்களும் உண்மைதானோ என்ற பார்வையும் மக்களிடம் எழ ஆரம்பித்துவிட்டது. போதாக்குறைக்கு அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்ற தகவலும் சமீபத்தில் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன.

திரிஷாவின் இன்ஸ்டா பதிவுகள்: விஜய்யின் பெர்சனல் வாழ்க்கையில் திரிஷாவின் பெயர் இழுக்கப்பட்ட சில மாதங்களாகவே அவரது இன்ஸ்டா போஸ்ட்டுகளும் பெரிய கவனத்தை ஈர்த்துவருகின்றன. நேற்றுகூட மே (என்) மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று போட்டிருந்தார். மே மாதம் ரிசல்ட் வரப்போகிறது. அதில் விஜய் கண்டிப்பாக வெற்றி பெற்றிடுவார் என்பது திரிஷாவின் நம்பிக்கை. இனிமேல் என்னுடைய காலம் என்பதை அப்படி பூடகமாக சொல்லியிருக்கிறார் என்றும் கணிப்புகள் இறக்கை கட்டி பறந்தன. ஆனால் அம்மணியோ எதையுமே கண்டுகொள்ளாமல் ரொம்பவே கூலாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலங்கும் திரிஷா: இந்நிலையில் அவரது புதிய இன்ஸ்டா போஸ்ட் ஒன்று மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சிறுமிகளும், சிறுவர்களும் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அதில் கலங்கும் எமோஜியையும் பகிர்ந்திருக்கிறார். விஜய்யுடன் ஆடிய நினைவுகளை நினைத்து கலங்குகிறார் என்றுதான் எல்லோரும் பேச தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமின்றி திரிஷா இப்படி ஃபீல் செய்றாங்களே ப்பா என்றும் கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டு சென்சேஷனல் ஆக்கிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X