த்ரிஷா கை, தொடையில் 'ஜெயம் ரவி' டாட்டூ
சென்னை: பூலோகம் படத்தில் நடிக்கும் த்ரிஷா தனது கை மற்றும் தொடையில் ஜெயம் ரவியின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளார்.
ஜெயம் ரவியும், த்ரிஷா உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். இதையடுத்து அவர்கள் தற்போது பூலோகம் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார்.

டாட்டூ
த்ரிஷா ஏற்கனவே தனது இடது பக்க மார்பு பகுதியில் டாட்டூ ஒன்ரை போட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு டாட்டூவை போட்டுள்ளார்.

ஜெயம் ரவி
த்ரிஷா தற்போது தனது கை மற்றும் தொடையில் புதிதாக டாட்டூ போட்டுள்ளார். அதுவும் ஜெயம் ரவியின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளது தான் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காதல்
பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் காதலியாக வரும் த்ரிஷா படத்திற்காக டாட்டூ போட்டுள்ளாராம். இது தற்காலிகமான டாட்டூவாம்.

என்றென்றும் புன்னகை
ஜீவா ஜோடியாக த்ரிஷா நடித்த என்றென்றும் புன்னகை வெற்றிப் படத்தை அடுத்து அவர் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











