விடாமுயற்சி படத்துக்காக திரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?.. மேடம் செம ஃபார்ம்ல இருக்காங்க
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தும் திரிஷாவும் சேர்ந்து நடிக்கும் 5ஆவது படம் ஆகும். இது தவிர்த்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா நடிக்கிறார். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தில் நடித்ததற்காக திரிஷா வாங்கியதாக ஒரு சம்பள தொகை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் திரிஷா. ஜோடி படத்தில் சின்ன வேடத்தில் தலை காட்டிய அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக மாறினார். ஹீரோயினானவுடன் வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட திரிஷா தனது திறமையை படத்துக்கு படம் மெருகேற்றினார். இதன் காரணமாக தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்தார்.

மற்ற மொழிகளில்: தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஹிந்தியில் மட்டும் அவர் எதிர்பார்த்தபடி அவரால் வெற்றிபெற முடியவில்லை. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அவர் நடித்த படம் சரியாக ஓடவிலை. அதேசமயம் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராணா டகுபதி, பிரபாஸ் என தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்கள், இளம் ஹீரோக்கள் என ஜோடி போட்டு ஃபுல் ஃபார்மில் நடித்துக்கொண்டிருந்தார்.
திரிஷாவுக்கு சறுக்கல்: சூழல் இப்படி இருக்க திடீரென சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவுக்கு வாய்ப்புகள் வருவது குறைய ஆரம்பித்தன. அதன் காரணமாக அவரது கரியர் முடிந்துவிட்டது என்று சிலர் கூறினார்கள். ஆனால் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்தார். அந்த ஜானு கதாபாத்திரம் திரிஷாவின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தி பிடித்தது. அதிலிருந்து லைம் லைட்டுக்கு வந்த அவர் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அடுத்த படங்கள்: 96க்கு பிறகு நடித்த படங்களில் பொன்னியின் செல்வனும் திரிஷாவுக்கு பெரிதும் உதவியது. அடுத்ததாக கமல் ஹாசனுடன் தக் லைஃப், தெலுங்கில் விஸ்வம்பரா, தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என வரிசையாக படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இவற்றில் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவி ஆறாம் தேதி வெளியாகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதியும், தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதமும், விஸ்வம்பரா இந்த வருடத்துக்குள் ரிலீஸாகின்றன.
விடாமுயற்சிக்கு சம்பளம்: அஜித்துடன் திரிஷா ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் நடித்திருக்கிறார். விடாமுயற்சி இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் ஐந்தாவது படமாகும். இந்நிலையில் விடாமுயற்சி படத்துக்காக திரிஷா வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கு அவர் ஆறிலிருந்து ஏழு கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











