எந்த சந்தேகமும் வேண்டாம்.. அந்த நடிகருடன்தான் நடிக்க ஆசை.. திரிஷா ஓபன் டாக்.. நடக்குமா?

சென்னை: தமிழின் முன்னணி நடிகையாக கடந்த பல வருடங்களாக இருப்பவர் திரிஷா. அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. அடுத்ததாக கமல்ஹாசனுடன் அவர் நடித்திருகும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இது தவிர்த்து தெலுங்கிலும் விஸ்வம்பரா படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் திரிஷா ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பிரவீன் காந்தி இயக்கிய ஜோடி படத்தில் சிறு கேரக்டரில் நடித்த திரிஷா லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். அவற்றில் லேசா லேசா வெளியாக தாமதமானது. எனவே முதலில் வெளியான மௌனம் பேசியதே படம்தான் அவருடைய முதல் படமாக கருதப்படுகிறது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி திரிஷாவுக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்து, அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வழிவகுத்தது.

முன்னணி ஹீரோயின்: அதன்படி தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட திரிஷா விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம், ரவி மோகன் என பலருடனும் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா, பிரபாஸ் என பலருடன் நடித்து பட்டையை கிளப்பினார். இருப்பினும் தமிழில் ரஜினி, கமலுடன் நடிக்கமுடியாமல் இருந்தார். அதுவும் மன்மதன் அம்பு, தூங்காவனம், பேட்ட ஆகிய படங்களின் மூலம் நிறைவேறியது.

Trisha has said that she would like to act with Fahad Faasil

மீண்டும் எழுந்த திரிஷா: இதற்கிடையே திரிஷாவுக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிரேம் இயக்கத்தில் 96 படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த ஜானு கதாபாத்திரம் பலரது ஃபேவரைட்டாக மாற்றியது. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி, அபியும் நானும் அபி ஆகிய கேரக்டர்கள் எப்படி கொண்டாட்டப்பட்டதோ அதேபோல் ஜானுவும் கொண்டாடப்பட்டார். 96 படத்துக்கு பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து அசத்தினார்.

பிஸியான நடிகை: 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அவர் மீண்டும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அஜித்துடன் வரிசையாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார். அவ்விரண்டு படங்களிலுமே திரிஷாவின் கேரக்டர் பெரிதாகவே பேசப்பட்டது. அடுத்ததாக கமலுடன் அவர் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு: கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் திரிஷா. ட்ரெய்லரிலும் கமலுக்கும் திரிஷாவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி பலரையும் ரசிக்க வைத்தது. அதேபோல் சுகர் பேபி பாடலிலும் திரிஷாவை ரசிகர்கள் உச்சக்கட்டமாக ரசிக்கிறார்கள். எனவே தக் லைஃப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் என்ன மாதிரியாக இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

திரிஷாவின் ஆசை: இந்நிலையில் திரிஷா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி திரிஷாவிடம் நீங்கள் எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், 'சந்தேகமே வேண்டாம். ஃபகத் பாசில்தான். அவர் எந்த மாதிரியான ஜானரில் நடித்தாலும் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கண்டிப்பாக அவருடன் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X