எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்னை இருந்தது உண்மைதான்.. ஓபனாக பேசிய திரிஷா.. என்ன நடந்தது?
சென்னை: நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் திரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் தனக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட பிரச்னை குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் திரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை திரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக திரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.
குந்தவை திரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்துவருகிறார்.
மீண்டும் லைம் லைட்டில்: திரிஷா இடையில் சறுக்கலை சந்தித்தார் என்பது உண்மைதான். ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு 96 படம் தரமான கம்பேக்காக அவருக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் லிஸ்ட்டில் ஹீரோயின்கள் வெகு சிலர்தான். அவர்களில் முதன்மையானவர் திரிஷா என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்த படம்: விடாமுயற்சி படம் மட்டுமின்றி கமல் ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் அவர் இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர் மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டிலும் கவனம் செலுத்திவருகின்றார். அந்தவகையில் அவர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று கூறப்படுகிறது.
திரிஷா பேட்டி: இந்நிலையில் திரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், 'எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்னை ஏற்பட்டது என்பது உண்மைதான். அது தொழிலால் வந்தது அல்ல. தனிப்பட்ட முறையில் வந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். இப்போது நட்புடனேயே இருக்கிறோம்' என்றார். முன்னதாக, குருவி படத்தில் முதலில் நயன்தாரா நடிக்கவிருந்ததாகவும்; அதனை திரிஷா தட்டி பறித்ததால் இருவருக்கும் பிரச்னை உருவானது என்றும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











