GOAT மட்ட பாடலுக்கு நடனம்.. அஜித்திடமே மறைத்த திரிஷா.. செம ஸ்மார்ட்டா இருந்திருக்காங்களே
சென்னை: நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் GOAT படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி மீண்டும் ட்ரெண்டிங்கிற்கு வந்திருக்கிறார் திரிஷா.
ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் திரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முன்னணி நடிகை: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை திரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக திரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.
குந்தவை திரிஷா: பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை ரொம்பவே கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. எனவே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் திரிஷா அந்த வெயிட்டேஜை தாங்குவாரா என ரசிகர்களில் சில கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு அவர் தனது நடிப்பால் பதில் சொல்லியிருந்தார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்துவருகிறார்.
மீண்டும் லைம் லைட்டில்: திரிஷா இடையில் சறுக்கலை சந்தித்தார் என்பது உண்மைதான். ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு 96 படம் தரமான கம்பேக்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் லிஸ்ட்டில் ஹீரோயின்கள் வெகு சிலர்தான். அவர்களில் முதன்மையானவர் திரிஷா என்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா வெப் சீரிஸ் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.
மட்ட திரிஷா: சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் பணிகள் ஆரம்பித்ததிலிருந்தே திரிஷா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ப்ரோமோஷன்களில் அதனை படக்குழு மறைத்தே வந்தது. தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக மட்ட பாடலுக்கு திரிஷா பக்காவான நடனத்தை விஜய்யுடன் போட்டிருந்தார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அஜித்திடம் மறைத்த திரிஷா: இந்நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி GOAT படத்தின் பணிகள்போது அஜர்பைஜானில் அஜித்தை சந்தித்தார் திரிஷா. அப்போது மட்ட பாடலின் சில பகுதிகளை அவரிடம் காண்பித்திருக்கிறார். அப்போது அங்கு திரிஷாவும் இருந்ததாக கூறப்படுகிறது. திரிஷாவை அழைத்து அஜித் அந்தப் பாடலை பார்க்கும்படி சொன்னதாகவும்; அதன்படி திரிஷா பார்த்தபோதுகூட தான் அந்தப் பாடலில் நடனமாடியிருக்கிறேன் என்று அஜித்திடம் சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் யப்பா திரிஷா செம தெளிவா இருந்திருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











