»   »  தனுஷ் தயாரிப்பில் ரஜினிக்கு ஜோடி த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

தனுஷ் தயாரிப்பில் ரஜினிக்கு ஜோடி த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தயாரிக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித் சூர்யாவை இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே இயக்க உள்ளார். இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

அமலா பால்

அமலா பால்

தனுஷுடன் சேர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த, வட சென்னை படத்தில் நடிக்கும் அமலா பால் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது.

த்ரிஷா

த்ரிஷா

ரஜினிக்கு ஜோடியாக அமலா பால் இல்லை த்ரிஷா அல்லது நயன்தாரா ஜோடியாக நடிக்கக்கூடும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாராவுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா தனுஷின் நெருங்கிய தோழி ஆவார்.

ரஜினி

ரஜினி

நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இதுவரை ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லையே என்ற தனது ஏக்கத்தை த்ரிஷா பலமுறை தெரிவித்துள்ளார். அவரது ஆசை நிறைவேறுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Buzz is that either Trisha or Nayanthara will be Rajinikanth's leading lady in his next movie to be produced by Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil