திரிஷா சரியான ரவுடி.. ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை.. ரவி மோகனே இப்படி சொல்லிட்டாரு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா கடந்த சில வாரங்களாகவே விஜய் விவகாரத்தில் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு பொதுவாக நண்பர்கள் அதிகம். அந்த நண்பர்களில் ஒருவராக ஏன் விஜய் இருக்கக்கூடாது என சிலர் பேசினாலும்; சங்கீதா விவாகரத்து கோரியிருக்கும் இந்த நிலைமையில் ஜோடியாக வந்ததுதான் புதிய பிரச்னைகளுக்கு காரணம் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் திரிஷா பற்றி ரவி மோகன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனக்கென மார்க்கெட்டை வைத்திருப்பவர் திரிஷா. சின்ன சின்ன தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து கேஷுவலாக மீண்டு வந்துவிட்டார். கடந்த வருடத்தில் தமிழில் பெரிய ஹீரோக்கள் படங்களில் மட்டுமே நடித்தார். 42 வயதிலும் இளமையோடும், திறமையோடும் இருக்கும் அவரை பார்த்து சக நடிகைகள் கொஞ்சம் பொறாமைப்படத்தான் செய்வார்கள். இந்த வருடம் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். மே மாதம் ரிலீஸாகிறது. இப்படி சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக ஜாலியாக வலம் வருகிறார்.

நண்பர்கள் அதிகம்: அவருக்கு எப்போதுமே நண்பர்களும், நண்பிகளும் அதிகம். அவர்களோடு வெளிநாடுகளுக்கு செல்வது, பார்ட்டி செய்வது, ஒன்றாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது என வழக்கமாக இருப்பார். இப்படி தொடர்ந்து நண்பர்களுடன் இருக்கும்போது சில பிரச்னைகளையும் சந்தித்திருக்கிறார். குறிப்பாக அவரது நண்பர்கள் லிஸ்ட்டில் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. அவர் இப்போது தனது பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னையில் இருக்கிறார். மனைவி சங்கீதா குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்து கோரியிருக்கிறார்.
ஜோடியாக வருகை: அந்த நிலைமை சீரியஸாக சென்றுகொண்டிருக்கும்போது; விஜய்யும், திரிஷாவும் ரொம்பவே கூலாக ஒரு திருமணத்தில் ஜோடியாக கலந்துகொண்டார்கள். அதுவும் ஒரே நிறத்திலான உடைகளை அணிந்துகொண்டு வந்திருந்தார்கள். அதை பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஷாக் ஆனது. மனைவி இங்கே இப்படி கண்ணீரோடு இருக்கிறார்; இவர் என்னவென்றால் நடிகையோடு ஊர் சுற்றுகிறாரே என விமர்சனங்கள் எழுந்தன. தவெகவினரே இதனை எதிர்பார்க்கவில்லைதான். தங்களது எதிர்ப்பையே பதிவு செய்தார்கள்.
அமைதி காக்கும் திரிஷா: அதேசமயம் சில பேர் முட்டு கொடுக்கவும்தான் செய்தார்கள். அவர்கள் நண்பர்களாக இருக்கக்கூடாதா என சிலரும், அவர்கள் நெருங்கிய உறவில் இருந்தால் என்ன தவறு என்று சிலரும் பேசினார்கள். இதுகுறித்து திரிஷாவிடமிருந்து ஒரு பதிலைக்கூட வாங்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது, இதை அவர் ஒரு விஷயமாகவே சட்டை செய்துகொள்ளவில்லையோ என்றும் தோன்றுவது குறிப்பிடத்தக்கது. திரிஷாவின் அடிப்படை குணமே அப்படித்தான்; எதையுமே சீரியஸ் பிரச்னையாக அணுகமாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள்.
ரவி மோகன் பேட்டி: இந்நிலையில் திரிஷாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரவி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரிஷா குறித்து பேசுகையில், "திரிஷா ஒரு ரவுடி. அவருக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. செம ஜாலியாக இருப்பார். திடீரென பயங்கரமாக கத்தவும் செய்வார். நிறைய ரவுடித்தனம் செய்திருக்கிறார். ரொம்ப வருடங்களாக அவரை எனக்கு நன்றாக தெரியும்" என்றார். முன்னதாக ரவி மோகன் இப்போது விவாகரத்து கோரியிருக்கும் ஆர்த்தியுடன் காதலிக்கும்போது சேர்வதற்கு திரிஷாவும் ஒரு காரணம் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications















