Trisha: சூர்யாவின் ஜோடிக்கு வந்த புது பிரச்னை.. த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தற்போது, சூர்யாவின் 45 வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து நடிகையாக வளர்ந்தவர். அமீர் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம், கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பின்னர் த்ரிஷாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூர்யா, அஜித், விக்ரம், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, அவர்களுக்குப் பின்னர் அவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் சிம்பு, தனுஷ் என அனைவருடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல், தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Trisha Trisha Twitter Account Trisha Instagram

த்ரிஷா: சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. த்ரிஷா சினிமாவிலேயே 22 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் இன்னும் முரட்டு சிங்கிளாவே உள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் அவ்வப்போது சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட த்ரிஷா, இப்போது அதிகம் நடிகர் விஜய்யுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் மற்றும் கிசுகிசுக்களை பார்த்து தயங்காத த்ரிஷா, சினிமாவில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே உள்ளார்.

Trisha Trisha Twitter Account Trisha Instagram

சினிமா லைன் அப்: நாய்களின் மீது பெரும் அன்பு செலுத்தும் த்ரிஷா, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் தனது வளர்ப்பு பிராணி இறந்துவிட்டதாக துக்கத்துடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது நடிப்பில் மலையாளப் படமான ஐடன்டிடி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது, தற்போது விடாமுயற்சி ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டு உள்ளது. இந்த ஆண்டில் அவரது நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருப்பது, தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 45 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Trisha Trisha Twitter Account Trisha Instagram

ஷாக்: இப்படியான நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், " எனது ட்விட்டர் கணக்கு அதாவது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல. கணக்கு மீட்கப்பட்டதும் தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. த்ரிஷாவை ட்விட்டர் பக்கத்தில் 6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

Trisha Trisha Twitter Account Trisha Instagram

More from Filmibeat

Read more about: trisha த்ரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X