த்ரிஷா.. த்ரிஷா..

தமிழ், தெலுங்கு இரண்டிலும் படு செல்வாக்கோடு, செம பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு அடுத்த ஆண்டு பாதி வரை கால்ஷீட் புக் நிரம்பி வழிந்து கொண்டுள்ளது.
சென்னைக்கும் ஹைதராபாத்துக்குமாக இரு மொழிகளிலும் ஓடி ஓடி, பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா கோடிகளில் புரண்டு வருகிறார்.
பணத்தை அப்படியே அசையா சொத்துக்களில் முடக்கிப் போட்டு எதிர்காலத்தை மிக ஸ்ட்ராங் ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் மிக விலை உயர்ந்த ஏரியாக்களில் இரு மாபெரும் பங்களாக்களை எழுப்பிவிட்ட த்ரிஷாவுக்கு ஹைதராபாத்தில் தான் அதிகமான முதலீடாம். சமீபத்தில் சென்னை நந்தனத்தில் பெரிய வீட்டைக் கட்டிப் போட்ட த்ரிஷா இப்போது ஹைதராபாத்திலும் இன்னும் ஒரு பங்களாவை வாங்கிப் போட்டிருக்கிறார்.
கூடவே 50 ஏக்கர் நிலத்தையும் வாங்கியிருக்கிறாராம் த்ரிஷா. அதில் பண்ணை வீடு அமைக்கும் எண்ணமாம்.
த்ரிஷா ரியல் எஸ்டேட் பிஸினசில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











