விஷால், ஜெயம் ரவி, ஜீவா.. துடைப்பத்தை எடுங்க!- அழைப்பு விடுத்த த்ரிஷா
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நீங்களும் சேருங்கள் என சக நடிகர்கள் ஜெயம் ரவி, விஷால் மற்றும் ஜீவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் த்ரிஷா.
ஸ்வாச் பாரத் என்ற பெயரில் பிரதமர் மோடி ஆரம்பித்த தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர்.

கமல்
இத் திட்டத்துக்கு பிரதமரால் அழைக்கபட்ட கமல் ஹாசன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ரசிகர்களுடன் ஈடுபட்டார்.

தமன்னா
நடிகை தமன்னாவும் மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.

சமந்தா
சமந்தாவும் ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள குப்பைகளை துடைப்பத்துடன் சென்று சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.

த்ரிஷா
அந்த வகையில் நேற்று த்ரிஷாவும் சென்னை அருகே உள்ள முடிச்சூர் கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு விலங்குகளுக்கான பாதுகாப்பு மையம் உள்ளது.
மையத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளும் பணியில் த்ரிஷா ஈடுபட்டார்.

நீங்களும் வாங்க ஹீரோக்களே
மேலும், அவர் தனது நண்பர்களான விஷால், ஜீவா, ஜெயம் ரவி மற்றும் சி.சி.எல். நட்சத்திர கிரிக்கெட் அணியையும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











