திரிஷாவா? நயனதாராவா?

By Staff


குருவி படத்தின் நாயகி யார் என்பதில் அந்தப் பட யூனிட்டாருக்கே இப்போது பெரும் குழப்பமாகியுள்ளதாம். காரணம், நீக்கப்பட்டதாக கூறப்படும் திரிஷா, மறுபடியும் விஜய்க்கு ஜோடியாக போடப்பட்டுள்ளார் என்று லேட்டஸ்டாக வெளியாகியுள்ள செய்தியால்தான்.


அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் முதல் படம் குருவி. விஜய்தான் நாயகன். படத்தை இயக்கப் போவது தரணி. இதுவரை எந்தக் குழப்பமும் இல்லை.

ஆனால் நாயகி யார் என்பதில்தான் பெரும் குப்பாச்சு, குழப்பாச்சுவாக இருக்கிறது. முதலில் திரிஷாதான் நாயகியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் போக்கிரி பட விழாவுக்கு திரிஷாவைக் கூப்பிடாமல் விட்டதால் விஜய் மீது அதிருப்தி அடைந்தார் திரிஷா.

விஜய்யும், திரிஷாவையும், அவரது அம்மாவையும் கூப்பிட்டு ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்து கூல் ஆக்கி அனுப்பினார். இதனால் இருவரும் சமரசமாகி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென திரிஷாவைத் தூக்கி விடுங்கள் என்று விஜய் கூறவே, இயக்குநர் தரணி குழம்பிப் போனார். விஜய்யை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் விஜய், திரிஷா வேண்டவே, வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

இதையடுத்து திரிஷாவுக்குப் பதில் வித்யா பாலன் நடிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென வித்யா பாலன் இல்லை என்று செய்தி வந்தது. நயனதாராதான் ஹீரோயின் என்று இயக்குநர் தரணி அறிவித்தார்.

இதை நயனதாராவும் ஆமோதித்தார். செப்டம்பர் 16ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல் கட்ட ஷூட்டிங் பாங்காக்கில் நடைபெறுகிறது. அதில் நான் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார் நயனதாரா.

ஆனால் அதற்குள் என்ன நடந்தேதா, ஏது நடந்ததோ தெரியவில்லை. திடீரென திரிஷாதான் படத்தின் நாயகி என்று புது நியூஸ் வெளியாகியுள்ளது.

திரிஷாவே இருக்கட்டும் என்று விஜய் கூறி விட்டாராம். இதையடுத்து திரிஷாதான் இப்படத்தின் நாயகியாக நடிக்கப் போகிறார். இதை திரிஷாவும் உறுதி செய்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் விஜய்யுடன் டூயட் பாடப் போகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

இதுகுறித்து தரணியிடம் கேட்டபோது, குருவி படத்தின் நாயகியாக திரிஷா நடிக்கிறார். விரைவில் செய்தியாளர்களைக் கூப்பிட்டு முறைப்படி அனைத்து தகவல்களையும் சொல்வோம் என்றார். இதே வார்த்தைகளைத்தான் நயனதாரா பற்றிச் சொல்லும்போதும் தரணி பயன்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

இப்படி நாயகிகள் பெயர் மாறி மாறி வருவதால் யார்தான் நிஜமாகவே ஹீரோயின் என்பது புரியாமல் குருவி யூனிட் மண்டையைக் குடைந்து கொண்டுள்ளதாம்.

Read more about: trisha nayanatara vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X