திரிஷாதான் லக்கி சார்ம்.. எங்கள் கேர்ள்ஸ் ட்ரிப் இருக்கே.. ஓபனாக போட்டுடைத்த மேடத்துக்கு நெருங்கிய கை

சென்னை: திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியான படங்களில் குட் பேட் அக்லி தவிர்த்து வேறு எந்த படமும் சரியாக போகவில்லை. ஆனால் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான முதல் படமே மெகா ஹிட்டடித்திருக்கிறது. கருப்பு இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. தொடர்ந்து அவர் நடிக்கும் பல படங்கள் வசூலை வாரி குவிப்பதால் அம்மணிதான் இப்போது லக்கி ஹீரோயின் என்ற பெயரை கோலிவுட்டில் எடுத்திருக்கிறார்.

திரிஷாவை பார்த்து பலரும் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால்; எப்படி இத்தனை வருடங்கள் ஒரு ஹீரோயின் அழகாகவும், முன்னணியிலும் இருக்க முடியும் என்பதுதான். கடந்த வருடத்தில் அவர் மூன்று படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் ஒரு படம் மட்டும் மெகா ஹிட்டடித்தது. மற்ற இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடி வாங்கின. இருப்பினும் திரிஷாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

Trisha Is My Lucky Charm Archana Kalpathi Opens Up About Their Friendship
Photo Credit:

கருப்பு திரிஷா: இளம் ஹீரோயின்கள் படை இருந்தாலும் 42 வயது அழகி அவர்களுக்கு டஃப் கொடுக்கிறார். பெரிய பட வாய்ப்புகளையும் கணிசமாக பெறுகிறார். அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி பெரிய ஹிட்டடித்திருக்கிறது. உலகம் முழுவதும் மொத்தம் 200 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.

Also Read
Parimala & Co X Review - பரிமளா & கோ எக்ஸ் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா?
Parimala & Co X Review - பரிமளா & கோ எக்ஸ் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?.. ஹிட்டா?

திரிஷாவுக்கு செம பெயர்: படத்தில் திரிஷாவுக்கு நல்ல பெயரே கிடைத்திருக்கிறது. கதைக்கு தேவையான நடிப்பை வழங்கிய அவர்; பார்ப்பதற்கு 20 வயது மாதிரி படத்தில் இருக்கிறார் என கொண்டாடுகிறார்கள். குறிப்பாக விஜய், அஜித், சூர்யா ஆகிய மூன்று பேருக்கும் அதிகம் வசூல் செய்த படங்களின் ஹீரோயின் திரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த ஒரு ஸ்டோரியைகூட அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பகிர்ந்திருந்தார்.

நட்பு வட்டம்: திரிஷாவை பொறுத்தவரை அவருக்கு நட்புக்கள் அதிகம். ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அவரது நட்பு லிஸ்ட் பெரியது. அவர்களில் முக்கியமானவர் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி. கருப்பு படத்தைகூட முதல் நாள் முதல் காட்சியில் அர்ச்சனாவும், திரிஷாவும்தான் ரோகிணி திரையரங்கத்தில் சென்று பார்த்தார்கள். ஏகப்பட்ட முறை வெளிநாடுகளுக்கும் ட்ரிப் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் அர்ச்சனா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் திரிஷா குறித்து பேசியிருக்கிறார்.

அர்ச்சனா பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "திரிஷாதான் எப்போதும் என்னுடைய லக்கி சார்ம். நாங்கள் நீண்ட வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்துவருகிறோம். அவர் என்னுடைய ஃபேவரைட். எங்களுக்கென்று ஒரு கேங் இருக்கிறது. கேர்ள்ஸ் நாங்கள் எல்லாம் சேர்ந்து அண்மையில் மொராக்கோ போய்வந்தோம். அப்போது எனது பிறந்தநாள். அதனால்தான் சென்றேன். அதேபோல் ஏதோவொரு ட்ரிப்பை பிளான் செய்தால்; அதை கலைத்துவிடுவது நானாகத்தான் இருப்பேன். திடீரென எனக்கு வேலை வந்துவிடும் என்பதால் அப்படி நடக்கும். அதை திரிஷா உள்ளிட்டோரும் புரிந்துகொள்வார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X