ரஜினி படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதி, ஆனால் பாவம்...
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.
அனைத்து சீனியர் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்ட த்ரிஷா ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது ஆசையை தெரியப்படுத்தி வந்தார்.

ரஜினி பட அறிவிப்பு வெளியாகும் போது எல்லாம் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் படத்தின் ஹீரோயின் சிம்ரன் என்று அறிவிப்பு வெளியானதை பார்த்து அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில் தான் ரஜினி படத்தில் த்ரிஷாவையும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதை இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக அவரின் மகள்களை விட சின்னவரான மாளவிகா மோகனன் நடிப்பதாக கூறப்படுகிறது.
அப்படி என்றால் த்ரிஷாவுக்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியவில்லை. சிம்ரன், த்ரிஷா, மாளவிகா என்று மூன்று ஜோடியாக இருக்குமோ?. இந்த விபரம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸின் ட்வீட்டை பார்த்த த்ரிஷாவுக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
எது எப்படியோ, த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. வாழ்த்துக்கள் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











