த்ரிஷாவுக்கு உடல் நலக்குறைவு.. படப்பிடிப்புகளை ரத்து செய்தார்!
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகை த்ரிஷா தனது படப்பிடிப்புகளை ரத்து செய்தார்.
கடந்த சில நாட்களாக இரவு பகல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் த்ரிஷா. இதனால் அவருக்கு உடல் சோர்வும் காய்ச்சலும் ஏற்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை.
மருத்துவமனைக்குச் சென்று தனது குடும்ப மருத்துவரைச் சந்தித்து சிகிச்சைப் பெற்றார்.

தற்போது மருத்துவர் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 10 நாட்களாக படுக்கையிலேயே இருக்குமளவு அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது.
த்ரிஷா தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்', ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்' மற்றும் மணிமாறன் டைரக்டு செய்யும் பெயரிடப்படாத படம் போன்றவற்றில் நடிக்கிறார்.
இதில் ‘என்னை அறிந்தால்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ‘பூலோகம்' படமும் விரைவில் வரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











