திரிஷா இருக்கும்வரை விஜய்யை ஒன்றும் செய்ய முடியாது.. மாந்தீரக சக்கரவர்த்தி அதிரடி.. என்ன சொன்னாங்க?

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ரொம்பவே ஃபேவரைட். இரண்டு பேரும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்துவைத்து ஒருதரப்பினர் கிசுகிசுக்கள் கிளம்பின. அவர்களோ அதை உறுதி செய்யும் விதமாக ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்து நின்றார்கள்.

பிரவீன் காந்தி இயக்கிய ஜோடி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி பிறகு ஹீரோயினாக மாறினார் திரிஷா. தொடர்ந்து பலருடன் நடிக்க ஆரம்பித்த அவர்; விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் முதன்முறையாக சேர்ந்து நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. மேலும் ஆன் கேமராவில் அவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக இருந்தது. இதனால் அந்த ஜோடியை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தின் பெரிய சக்சஸ் தொடர்ந்து அவர்களை திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தார்கள்.

Trisha Is Vijay s Strength Mystic Claim Sparks Buzz Amid Ongoing Rumors
Photo Credit:

பல வருடங்கள் நடிக்கவில்லை: அவர்கள் தொடர்ந்து நடித்ததை வைத்து இரண்டு பேரையும் சேர்த்து திரைத்துறையில் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். இதனால்தான் இடையில் அவர்கள் சேர்ந்து நடிப்பதை நிறுத்தியிருந்தார்கள் என்ற பேச்சும் உண்டு. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தார்கள். படம் ஃப்ளாப் ஆனாலும் விஜய் - திரிஷா ஜோடி வழக்கம்போல் கொண்டாடப்பட்டது. படத்தில் லிப் லாக் காட்சியை எல்லாம் வைத்திருந்தார்கள்.

மீண்டும் பஞ்சாயத்து: பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்களை இணைத்து லியோ படத்திலிருந்து கிசுகிசுக்க ஆரம்பிக்கப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளுக்கு லிஃப்ட்டில் அவருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா வாழ்த்து தெரிவித்தார். அதை வைத்து பலரும் பல விதமாக பேச ஆரம்பித்தார்கள். மேலும் இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள்; விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிவதற்கே இதுதான் காரணம் என்று இஷ்டத்துக்கு பேசினார்கள்.

சங்கீதாவின் குண்டு: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து மனு தாக்கல் செய்து; நடிகையுடன் விஜய்க்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஏற்கனவே திரிஷா - விஜய் கிசுகிசுவுக்கு இது மேற்கொண்டு பலம் சேர்த்தது. அவர் அப்படி குற்றஞ்சாட்டி சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஒரே கலரில் ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்தார்கள். மேலும் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும்; இன்னும் சில வருடங்களில் சினிமாவிலிருந்து விலகி விஜய் கட்சியில் திரிஷா இணைவார் என்று பல பேச்சுக்கள் வருகின்றன.

மாந்திரீக சக்கரவர்த்தி பேட்டி: இந்நிலையில் மாந்திரீக சக்கரவர்த்தி என அழைக்கப்படும் சாமுண்டி மலைக்கா தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "திரிஷாவின் ஜென்ம ஜாதகம் என்னவென்று நான் சொல்கிறேன். திரிஷா மலையாளி. பகவதி குல தெய்வம். விஜய் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணமே திரிஷாதான். விஜய்யோடு திரிஷா இருக்கும்வரை விஜய்யை எதுவுமே செய்ய முடியாது. திரிஷாதான் விஜய்யின் பலமே. இப்போது அவர்கள் பற்றி வரும் நெகட்டிவ் எல்லாம் பாசிட்டிவ்வாக மாறும். பகவதியின் அனுக்கிரஹம் இருப்பவர்களை எல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது. அவரை கீழே தள்ளலாம். ஆனால் அழிக்க முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X