முன்னணி ஹீரோவுடன் ஸ்பெயின் செல்லும் திரிஷா?.. என்ன விஷயத்துக்காக தெரியுமா?
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.இந்தச் சூழலில் திரிஷா நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று திரைத்துறையில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் திரிஷா. அதனையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்குள் மௌனம் பேசியதே படத்தில் கமிட்டாகிவிட்டார் த்ரிஷா. எனவே அவர் கமிட்டான முதல் படம் லேசா லேசா ஆனால் முதலில் ரிலீஸான படம் மௌனம் பேசியதே.

தனியாவா பேசலாமே: அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் த்ரிஷா. குறிப்பாக சூர்யாவிடம், தனியாவா பேசலாமே என அவர் சொல்வது ரசிகர்களின் மொபைலில் பல வருடங்களுக்கு இருந்தது. மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு தொடர்ந்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
கனவுக்கன்னி த்ரிஷா: அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார். பிறகு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் கடந்த பல வருடங்களாகவே டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் லியோ திரைப்படம் வெளியானது.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பிருந்த என்ற வெப் சீரிஸ் என வரிசையாக லைன் அப் இருக்கின்றன. நயனும் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்திருப்பதால் திரிஷா காட்டில் அடைமழை என்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்தியில் திரிஷா: இந்நிலையில் திரிஷா மீண்டும் ஹிந்தியில் எண்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விஷ்ணுவர்தன் சல்மான் கானை வைத்து The Bull என்ற படத்தை இயக்கவிருப்பதாகவும்; அதில் திரிஷாதான் ஹீரோயின் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் பல காட்சிகளை ஸ்பெயினில் எடுப்பதற்கு விஷ்ணு திட்டமிட்டிருப்பதாகவும்; அதன் காரணமாக கூடிய விரைவில் திரிஷா படக்குழுவுடன் இணைந்து அந்த நாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











