கருப்பு பட இசை வெளியீட்டு விழாவில் புறக்கணிக்கப்பட்ட திரிஷா?.. சப்போர்ட்டுக்கு வந்த பிரபலம்
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. அப்படம் இந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நடிகை திரிஷா கலந்துகொள்ளாதது பெரிய பேசுபொருளானது. அதுதொடர்பாக அவரும் கூலான ஒரு பதிலை சொல்லியிருந்தார். இந்நிலையில் வேண்டுமென்றே கருப்பு பட இசை வெளியீட்டு விழாவில் திரிஷா புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வர ஆரம்பித்தன.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ, கங்குவா உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.மாறாக படுதோல்வியையும், கடுமையான ட்ரோலையும் சந்தித்தன. அதிலும் கங்குவா படத்தின் நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இரண்டு படங்களிலும் பெற்ற தோல்விக்கும், இத்தனை வருடங்கள் கிடைக்காத ஒரு தியேட்டரிக்கல் ஹிட்டுக்கும் சூர்யாவும், அவரது ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கருப்பு படத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

ஏன் அந்த நம்பிக்கை?: கருப்பு படத்தின் அவுட் லைனே பக்கா கமர்ஷியலானது என்று இன்டஸ்ட்ரியில் பேச்சுக்கள் ஓடுகின்றன. மேலும் இந்தக் கதையைத்தான் முதலில் விஜய்க்கு எழுதினாராம் பாலாஜி. அவர் நடிக்க முடியாமல் போக சூர்யாவுக்கு ஏற்ற மாற்றங்களை செய்து அவரை ஓகே செய்துவிட்டார். மேலும் படத்தின் க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர் எல்லாம் பட்டையை கிளப்புகின்றன. இதுவரை பார்த்த சூர்யாக்களிலேயே இந்தப் படத்தில் கண்டிப்பாக வேறு ஒரு ஃப்ளேவரில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோயினாக திரிஷா: படத்தின் ஹீரோயினாக திரிஷா கமிட்டாகியிருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர்கள் சேர்ந்து நடித்த ஆறு உள்ளிட்ட படமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. எனவே இந்தப் படமும் அந்த சென்ட்டிமென்ட்டில் ஓடும் என நம்புகிறார்கள். இப்படி அத்தனை விதத்திலும் படம் தங்களுக்கு பாசிட்டிவ் மன நிலைமையை தருவதால் சூர்யா ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
இசை வெளியீட்டு விழாவில் திரிஷா இல்லை: படமானது மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஹீரோயின் திரிஷா கலந்துகொள்ளவில்லை. அது பெரிய பேசுபொருளானது; மேலும் இதுகுறித்து ரசிகர் எழுப்பியிருந்த கேள்விக்கு, "கருப்பு படத்தில் நடித்ததை நானும்கூட மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்களுக்கு (படக்குழு) நினைவூட்டியது நல்லது. எனக்கான இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் மெயில் தொலைந்துபோய்விட்டது போல" என்று கிண்டலாக பேசியிருந்தார்.
சப்போர்ட்டுக்கு வந்த பிரபலம்: திரிஷாவின் அந்த பதில்களை பார்த்த ரசிகர்களோ வேண்டுமென்றே அவரை படக்குழு புறக்கணித்திருப்பதாக பேச தொடங்கினார்கள். ரசிகை ஒருவரோ, 'திரிஷாவை நோக்கி எறியப்படும் இந்த பெண் வெறுப்பு வருத்தத்தை தருகிறது. ஆண்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுவதில்லை. திரிஷா போன்ற ஒரு நடிகையையே மதிக்காதது கவலைக்குரிய ஒன்றாகும்' என தெரிவித்திருந்தார். அதை பகிர்ந்த அதிதி ரவீந்திரநாத், 'Exactly' என்று சப்போர்ட் செய்திருக்கிறார். இவர் சூர்யா, மணிரத்னம் போன்றோரிடம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
