எத்தனை கோடியானாலும் வேண்டாம்.. ரஜினி - கமல் இணையும் படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா?.. காரணம் யார்?

சென்னை: ரஜினிகாந்த் - கமல்ஹாசனை சேர்த்து வைத்து நெல்சன் திலீப்குமார் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி அந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் திரிஷாதான் ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும், கமலும் இணைந்து நடித்து 40 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. இந்த இடைபட்ட வருடங்களில் அவர்களுக்கான மார்க்கெட் எக்கச்சக்கமாக வளர்ந்து இந்திய சினிமாவின் தனித்த ஆளுமைகளாகவும் மாறினார்கள். எப்படியாவது அவர்கள் திரைத்துறையிலிருந்து விலகுவதற்கு முன்பே கடைசியாக ஒரு முறை சேர்ந்து நடித்திட வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அதற்கான முயற்சிகளில் சிலர் இறங்க; அந்த ஐடியாவில் ரஜினியும், கமலுமே இருந்ததால் உடனடியாக ஒத்துக்கொண்டார்கள்.

Trisha Krishnan Exits Nelson Film With Rajinikanth and Kamal Haasan Viral Buzz Explained
Photo Credit:

அறிவிப்பு வீடியோ: இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றுதான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவர் சொன்ன கதையின் அவுட் லைனில் உடன்பாடு இல்லாததால்; இயக்குநராக நெல்சன் திலீப்குமாரை ஃபிக்ஸ் செய்தார்கள் இரண்டு பேரும். நெல்சன் பொதுவாக ஜாலியாக படம் எடுக்கக்கூடிய ஆள் என்பதால்; ஒரு மென்மையான மற்றும் காமெடியான படத்தை கொடுப்பதற்காக அவரை டிக் செய்திருப்பதாக தெரிகிறது. படத்தின் அறிவிப்பு வீடியோவும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Also Read
மனைவியின் மூளையில் ரத்த கசிவு.. எப்படியாவது காப்பாற்றுங்கள்.. முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் கோரிக்கை
மனைவியின் மூளையில் ரத்த கசிவு.. எப்படியாவது காப்பாற்றுங்கள்.. முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் கோரிக்கை

படத்தின் பணிகள் எப்போது?: இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கவிருக்கிறார். இதற்காக பிரமாண்ட பட்ஜெட்டை அந்த நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது. இதுவரை ஒரு தமிழ் படம்கூட ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொடவில்லை. எனவே அந்த மோசமான ரெக்கார்டை இதன் மூலம் உடைத்துவிட வேண்டும் என ரஜினி - கமல் - இன்பன் - நெல்சன் ஆகிய நான்கு பேருமே இருப்பதாகவும்; அதை சாத்தியப்படுத்தக்கூடிய அத்தனை பணிகளையும் செய்ய தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் தெரிகிறது.

யார் ஹீரோயின்?: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அதாவது, இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார் என்றும்; அதற்கு சம்பளமாக மொத்தம் 12 கோடி ரூபாயை கொடுக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. இதனால் திரிஷாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது விஜய் இப்போது முதலமைச்சராகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார். அதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் உதயநிதி Vs விஜய் என மாறியிருக்கிறது. பேரவையில் உதயநிதி விஜய்யை லாக் செய்ய; முதலமைச்சரும் தேவையான பதிலடியை கொடுத்துவருகிறார். இதற்கிடையே விஜய்யும், திரிஷாவும் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது; ரெட் ஜெயன்ட் மூவிஸின் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பது அவ்வளவாக சரியாக இருக்காது என்று முடிவெடுத்து ரஜினி - கமல் படத்தை ரிஜெக்ட் செய்துவிட்டதாகவும்; எத்தனை கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தாலும் கமிட்டாகமாட்டேன் என்று திட்டவட்டமாக திரிஷா முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X