விஜய் பதவியேற்பது இருக்கட்டும்.. ரஜினி - கமல் படத்தில் திரிஷா ஹீரோயினாம்.. சம்பளம் எவ்வளவு?

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்திருப்பவர் திரிஷா. கடைசியாக அவர் மூன்று பெரிய படங்களில் நடித்தார். அவை அனைத்துமே மெகா ஹிட்டெல்லாம் இல்லை. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் கருப்பு இன்னும் சில வாரங்களில் ரிலீஸாகவிருக்கிரது. விஸ்வம்பரா படமும் வருகிறது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைந்திருக்கும் படத்தில் திரிஷா ஹீரோயினாக கமிட்டாகிறார் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்கள் ஆவார்கள். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார்கள். இரண்டு பேருக்குமே வயது 70க்கும் மேல் ஆகிறது. இந்த வயதிலும் அவர்கள் அனைத்து ஹீரோக்களுக்கும் போட்டியாக இருக்கிறார்கள். இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் கரியரை ஆரம்பித்து; சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் 40 வருடங்களுக்கு முன்பு சேர்ந்து நடித்திருந்தார்கள்.

Trisha Krishnan Likely to Join Rajinikanth-Kamal Haasan Film Directed by Nelson Dilipkumar
Photo Credit:

மீண்டும் சேர்ந்த ஜாம்பவான்கள்: அதற்கு பிறகு அவர்கள் தனித்தனியாக நடித்து தங்களுக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஜாம்பவான்களும் சினிமாவிலிருந்து ஒதுங்குவதற்கு முன்பு சேர்ந்து நடித்துவிட மாட்டார்களா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர்கள் இரண்டு பேரும் இணைவது என்பது முடிவானது. படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதிதான் இதற்கு தயாரிப்பாளர்.

Also Read
அய்யோ என்னையும் என் பொண்ணையும் அடிச்சி கொடுமை படுத்துறாங்க.. கதறி அழுத ஜி.பி. முத்து
அய்யோ என்னையும் என் பொண்ணையும் அடிச்சி கொடுமை படுத்துறாங்க.. கதறி அழுத ஜி.பி. முத்து

படத்தில் யார் ஹீரோ?: அறிவிப்பே ஒரு வீடியோவுடதான் தான் வந்தது. அதில் ரஜினியும், கமலும் ரெட்ரோ லுக்கில் தோன்றி கலக்கியிருந்தார்கள். ஆனாலும் வீடியோ எல்லோருக்குமே திருப்தியை கொடுக்கவில்லை. பார்ப்பதற்கு ஏஐ வீடியோ போன்று இருப்பதாக விமர்சித்தார்கள். இருந்தாலும் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் அந்த வீடியோவின் இறுதியில் நெல்சனிடம், யார் ஹீரோ என்று கமல்ஹாசன் கேட்டது மாதிரிதான் தமிழ்நாட்டில் அனைவருமே கேட்கிறார்கள். அத்தனைக்கும் நெல்சனிடம் பதில் இருக்கிறது.

திரிஷா ஹீரோயின்?: இந்நிலையில் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது இந்தப் படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது என்றும்; அதில் உடன்பாடு ஏற்பட்டு படத்தில் நடிக்க அவர் கமிட்டாகிவிட்டார் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். முன்னதாக கமலுடன் மன்மதன் அம்பு, தூங்கா வனம், தக் லைஃப் ஆகிய மூன்று படங்களிலும் ரஜினியுடன் பேட்ட படத்திலும் நடித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

படத்தின் ஷூட்டிங் எப்போது?: படத்தின் ஷூட்டிங்கை பொறுத்தவரை கூடிய விரைவில் தொடங்கவிருப்பதாக திரைத்துறை வட்டாரத்தினர் கூறுகிறார்கள். இப்போது தன் உதவி இயக்குநர்களுடன் கதையை இறுதி செய்யும் பணியிலும், லொக்கேஷன்கள், மற்ற நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்களை உறுதி செய்யௌம் பணியிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை வருடங்களாக தமிழிலிருந்து ஒரு படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. இந்தப் படம் அதனை முறியடிக்கும் என்பது கோலிவுட் ரசிகர்களின் விருப்பம், நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X