இந்திய சினிமாவில் டாப் 3 நடிகர்களின் லிஸ்ட்.. பிரபல நடிகை த்ரிஷா டிக் பண்ணிய ஹீரோக்கள் இவங்கதான்!
சென்னை: இந்திய அளவில் சிறந்த மூன்று நடிகர்கள் யார் என்பதை நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக, ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுனுக்கு முன்
இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இது ஆக்ஷன் த்ரில்லர் படம். இதில் த்ரிஷா டாக்டராக நடிக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தான் ஆவலாக எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார் த்ரிஷா. இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க, த்ரிஷா ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

விலகி விட்டார்
இதை கொரட்டலா சிவா இயக்குகிறார். லாக்டவுனுக்கு முன்பாக நடிகை த்ரிஷா, இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

காஜல் அகர்வால்
இது பரபரப்பானது. இதனால் அந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். இதற்கிடையே லாக்டவுனில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். லாக்டவுனில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் நடிகர், நடிகைகள், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வருகின்றனர்.

ஆமிர் கான்
நடிகை த்ரிஷாவும் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பேட்டி அளித்தார். அப்போது இந்திய அளவில் சிறந்த மூன்று நடிகர்களின் பெயரை அவரிடம் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு தயங்காமல் பதில் சொன்னார் த்ரிஷா. அந்த மூன்று பேர், கமல்ஹாசன், ஆமிர்கான், மோகன்லால். இதில் ஆச்சரியமேதும் இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











