Trisha: சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்.. எல்லாம் விஜய்க்காகவா?
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகிகளில் ஒருவர். கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக கெரியரை தொடங்கிய இவர், 24 ஆண்டுகளாக கதாநாயகியாக கொடி கட்டிப் பறந்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல்கள் உண்மைதான். நானும் இது தொடர்பாக சில தயாரிப்பாளர்களிடம் பேசினேன். த்ரிஷா படங்களில் கமிட் ஆவதை முழுவதுமாக கைவிட்டுவிட்டார் " என்று கூறியுள்ளார். நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் அரசல் புரசலாக வந்து கொண்டு இருந்த நிலையில் தற்போது அதை தமிழ் சினிமா குறித்த நம்பகத்தன்மையான தகவல்களை தெரிவிக்கும் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

காரணம் இதுவா?: அதே நேரத்தில் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் நல்ல பழக்கம் உள்ளதால், விஜய்யின் கட்சியில் இணைந்து எதிர்காலத்தில் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட த்ரிஷா திட்டுமிட்டு விட்டாரா என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











