குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. ஹார்ட் பிரேக்.. திரிஷா ஓபன்.. என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. அடுத்ததாக அவரது நடிப்பில் கருப்பு, விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் விஜய்யின் பிரச்னையில் அவரது பெயர் சேர்ந்துவிட்டது. அவருடன் சேர்ந்துகொண்டுதான் சங்கீதாவை விஜய் வெறுப்பேற்றியிருப்பாரோ என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. கண்டிப்பாக விஜய்யிடமிருந்து திரிஷா விலகிவிட வேண்டும்; அதுதான் இரண்டு பேருக்குமே நல்லது என அட்வைஸ் மழையும் பொழிவது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் பீக்கில் இருந்த திரிஷாவுக்கு இடையே சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதனை சரி செய்து 96, பொன்னியின் செல்வன், லியோ, ராங்கி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என வரிசையாக நடித்தார். அத்தனையும் பெரிய ஹீரோக்கள் படங்கள். ராங்கியில் கதையின் நாயகி. அடுத்ததாக சூர்யாவுடன் கருப்பு, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நயனும் திருமணம் செய்து முன்னர் போல் தொடர்ச்சியாக படங்கள் நடிக்காததாலும்; கதாநாயகிகள் பஞ்சத்தாலும் திரிஷா இப்போதும் லைம் லைட்டில் இருக்கிறார்.

விஜய் பிரச்னையில் திரிஷா: அவருக்கு இப்போது வயது 42 ஆகும். திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் அவர்; ஒரு திருமணத்துக்கு விஜய்யுடன் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்தார். அந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்புதான் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே திரிஷாவின் நாயை விஜய் கொஞ்சியபடி இருந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தன. அப்போ, அந்த ஃபோட்டோவை எல்லாம் போட்டு சங்கீதாவை திரிஷா வெறுப்பேற்றிருக்கிறாரோ என விவாகரத்து மனுவை படித்தவர்கள் கருதுகிறார்கள்.

அமைதி காக்கும் திரிஷா: தொடர்ந்து இவ்விஷயத்தில் திரிஷாவுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஆனால் திரிஷாவோ அமைதியே காக்கிறார். அதேசமயம் அவரது தாயோ, விஜய்யையும் திரிஷாவையும் இணைத்து வரும் ரீல் ஒன்றை விடுவதில்லை. அத்தனைக்கும் தவறாமல் லைக்கும் போட்டு வைக்க; அதுவும் பெரிய விவாதமாகிவிடுகிறது. தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கலை சந்திக்கிறோமே என தவெகவினர் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி: இந்நிலையில் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகியிருக்கிறது. அதாவது முதலில் ஒரு ஸ்டோரியில் தனது நாய்க்குட்டியான இஸ்ஸியை குளிக்க வைக்க முயற்சிக்கிறார். அதற்கு அந்த நாய் டிமிக்கி கொடுக்கிறது. அந்த வீடியோவில் கேப்ஷனாக, 'குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. ஃபைனஸ்ட்' என குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் இன்னொரு வீடியோவில் ஒருவர் நாய் வளர்ப்பவர்கள் பற்றி பேசுகிறார். அதில் அவர், "நாய்கள் வளர்ப்பவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்.
எல்லாம் தெரியும்: தங்களுடைய பெஸ்ட் நண்பர்களை இழக்கும் லூப்பில் அவர்கள் இருக்கிறார்கள். நாய்களை விடவும் நாம் அதிகம் வாழ்வோம் என்றும் அவர்களுக்கு தெரியும். 12 ஆண்டுகளில் நாய் இறந்துவிடும் எனவும் தெரியும். அப்படி இறக்கும்போது மனமுடைந்து போவார்கள். அதற்கு பிறகும் மீண்டும் இதயம் நொறுங்கும் என தெரிந்தும்கூட இன்னொரு நாயை எடுத்து வளர்ப்பார்கள். நாய்கள் வளர்ப்பதற்கு முன்பு சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்க அவர்கள் தங்களது இதயம் உடைந்து போக சில நேரங்களில் அனுமதிக்கிறார்கள்' என்றிருக்கிறார். முன்னதாக திரிஷா வளர்த்த ஜோரா என்ற நாய்க்குட்டி சில வருடங்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















