திருப்பதி சென்றிருக்கும் திரிஷா.. பிறந்தநாளுக்கா? தேர்தல் முடிவுக்கா?.. மேடத்தோட வேண்டுதல் என்ன?

சென்னை: விஜய்யும், திரிஷாவும் இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். திரிஷா தன் கொள்கையை தளர்த்திக்கொண்டு கோட் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார். சூழல் இப்படி இருக்க விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவாலும், அவர் அதில் சாட்டியிருந்த குற்றச்சாட்டுக்களாலும் விஜய்யின் வாழ்க்கையில் திரிஷா நுழைந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக இரண்டு பேரும் ஜோடியாக ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

விஜய் - திரிஷா பற்றி கடந்த பல வருடங்களாகவே ஏதோ ஒன்று பேச கன்டென்ட் கிடைத்தது. அதெல்லாம் வதந்தி என்ற போர்வைக்குள் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் போயின. ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த விவாகரத்து மனுவில்; விஜய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டுக்களை நம்புவதா வேண்டாமா என்பதில் பலரும் குழம்பியிருந்த சூழலில் விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக வந்து தங்களை பற்றிய பேச்சுக்களை வதந்தி போர்வையிலிருந்து எடுத்து உண்மை என்று எல்லோராலும் சொல்ல வைத்துவிட்டார்கள்.

Trisha Krishnan s Birthday Draws Attention Amid Buzz Around Vijay
Photo Credit:

என்னதான் நடக்குது?: இவர்கள் இரண்டு பேர் விஷயத்தில் என்ன நடக்கிறதென்று பெரும்பாலும் யூகிக்கப்பட்டாலும் அதெல்லாம் உண்மையா என்பதை நம்புவதில் குழப்பமடைகிறார்கள் ரசிகர்கள். திரிஷா அரசியலுக்கு வரவிருக்கிறார் என்று பலராலும் பேசப்பட்ட சூழலில்; தான் முதலமைச்சராக வேண்டும் என்று எப்போதோ கொடுத்த பேட்டி இப்போது ட்ரெண்டானது. தேர்தலுக்கு வாக்களிக்க வந்தபோது, 'இளம் தலைவர் வாழ்கவே' என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது என்னதான் நடக்கிறது என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.

மே மாதம்: சில நாட்களுக்கு முன்புகூட திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து, 'மே (என்) மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது' என்று கூறியிருந்தார். அதை வைத்து, தேர்தல் முடிவுகளை மனதில் வைத்துதான் இப்படியெல்லாம் அவர் போஸ்ட்டுகளை போடுகிறார் என பேச்சுக்கள் கிளம்பின. தன்னை சுற்றி எவ்வளவு பெரிய விஷயங்கள் பேசப்பட்டாலும் திரிஷா அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. ரொம்பவே கூலாக தன்னுடைய வாழ்க்கையிலும், கரியரிலும் கவனம் செலுத்திவருகிறார்.

நாளை பிறந்தநாள்: எல்லோரும் நாளை (மே 4) தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க திரிஷாவுக்கு பிறந்தநாளும் அன்றுதான். விஜய்யின் அரசியல் வாழ்க்கை இனிமேல் என்னவாக இருக்கும் என்று தீர்ப்பு எழுதக்கூடிய நாள் திரிஷாவின் பிறந்தநாளாக அமைந்திருப்பது உண்மையில் ஆச்சரியம்தான். இதன் காரணமாகவே நாளைய திரிஷாவின் பிறந்தநாள் எப்போதும் இல்லாத அளவுக்கு கவனத்துக்கும், முக்கியத்துவத்துக்கும் ஆளாகியிருக்கிறது. இந்நிலையில் திரிஷாவின் தற்போதைய செயல் ஒன்றும் கவனத்தை ஈர்த்திருக்கிறது

திருப்பதி பயணம்: அதாவது திரிஷா தற்போது திருப்பதி சென்றிருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். நாளை தனது பிறந்தநாளுக்காக திருப்பதிக்கு சென்று வேண்டிக்கொள்கிறாரா இல்லை தேர்தல் முடிவுகள் விஜய்க்கு சாதகமாக வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறாரா என்ற கமெண்ட்ஸ்கள் பறக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆகமொத்தம் நாளைய திரிஷா பிறந்தநாள் நிச்சயமாக பேசுபொருளாக இருக்கப்போகிறது என்பது பரவலான கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X