காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. திரிஷா மேடம் சொல்வதை கேளுங்க

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ரொம்பவே ஃபேவரைட். இரண்டு பேரும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த விஷயம் கிளப்பிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே விஜய்யும், திரிஷாவும் ஜோடி போட்டு வந்தது அடுத்தக்கட்ட விவாதத்தை கிளப்பியது.

பிரவீன் காந்தி இயக்கியிருந்த ஜோடி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிறகு ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. திரைத்துறைக்கு வரும் முன்பு அவர் மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்தார். முதல் படமே மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து பலருடன் நடிக்க ஆரம்பித்த அவர்; விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் முதன்முறையாக சேர்ந்து நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. மேலும் ஆன் கேமராவில் அவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக இருந்தது. இதனால் அந்த ஜோடியை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தார்கள்.

Trisha Krishnan s Cryptic Post Amid Vijay Controversy Sparks Debate
Photo Credit:

பல வருடங்களுக்கு பிறகு: அவர்கள் தொடர்ந்து நடித்ததை வைத்து இரண்டு பேரையும் சேர்த்து திரைத்துறையில் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்தன. இதனால்தான் இடையில் அவர்கள் சேர்ந்து நடிப்பதை நிறுத்தியிருந்தார்கள் என்ற பேச்சும் உண்டு. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தார்கள். படம் ஃப்ளாப் ஆனாலும் விஜய் - திரிஷா ஜோடி வழக்கம்போல் கொண்டாடப்பட்டது. படத்தில் லிப் லாக் எல்லாம் பட்டையை கிளப்பின.

மீண்டும் பஞ்சாயத்து: அந்த ஜோடி கொண்டாடப்பட்டாலும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்களை இணைத்து கிசுகிசுக்க ஆரம்பிக்கப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளுக்கு லிஃப்ட்டில் அவருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா வாழ்த்து தெரிவித்தார். அதை வைத்து பலரும் பல விதமாக பேச ஆரம்பித்தார்கள். மேலும் இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள்; விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிவதற்கே இதுதான் காரணம் என்று இஷ்டத்துக்கு பேசினார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் சங்கீதா புது குண்டை தூக்கி போட்டார்.

Also Read
விஜய், திரிஷாவுக்கு திருமணம் முடிந்தது.. குண்டை தூக்கிப்போடும் பிரபலம்.. இது என்னங்க புதுசா இருக்கு?
விஜய், திரிஷாவுக்கு திருமணம் முடிந்தது.. குண்டை தூக்கிப்போடும் பிரபலம்.. இது என்னங்க புதுசா இருக்கு?

சங்கீதா போட்ட குண்டு: அவர் கடந்த மாதம் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், 'தனது கணவர் விஜய்க்கும், நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது' என சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். அவர் அப்படி கூறிய சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஏஜிஎஸ் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அப்போதிருந்து அவர்களுக்கு எதிரான கருத்தே நிலவிவருகின்றன. ஆனால் இரண்டு பேரும் சைலெண்ட்டாக அந்த விஷயத்தை கடக்கிறார்கள்.

திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி: இந்தப் பிரச்னை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. முக்கியமாக அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரோ என்றும் உற்று நோக்குகிறார்கள். இந்நிலையில் இப்போது அவர் தனது ஸ்டோரியில் இரண்டு குரங்குகளின் புகைப்படங்களை வைத்திருக்கிறார். மேலும் அதில், தன் காதலியை பாதுகாக்க, ஒரு குரங்குடன் சண்டையிட்டு அதை விரட்டுகிறான். ஜென்டில்மேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X