நாயை குளிப்பாட்டி நடு வீட்டில்.. திரிஷா என்ன செஞ்சுருக்காங்க பாருங்க.. மேடம் வேற லெவல்
சென்னை: நடிகை திரிஷா நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. அப்படம் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. அடுத்ததாக திரிஷா நடிப்பில் விஸ்வம்பரா திரைப்படம் வருகிறது. மேலும் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டில் இரண்டு தசாப்தங்களாக முன்னணியில் இருப்பவர் திரிஷா. அவருடன் கரியரை தொடங்கிய பல நடிகைகள் இன்று காணாமல் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ குணசித்திர வேடத்துக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார்கள். ஆனால் திரிஷாவோ இன்னமும் டாப் ஹீரோயினாக ஜொலிக்கிறார். பிரியங்கா மோகன், கயாடு லோஹர் என இளம் ஹீரோயின்களின் படை வந்தாலும்; ஒற்றை ஆளாக அவர்களுக்கு பயங்கரமான போட்டியை கொடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறை ஆச்சரியம்: திரிஷாவுக்கு இப்போது 42 வயது ஆகிறது. இந்த வயதிலும் தனது அழகு, திறமையை குறையாமல் வெளிப்படுத்துவதை பார்த்து அனைவருமே ஆச்சரியம்தான் படுகிறார்கள். இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது; சினிமாவிலிருந்து ஒதுங்கப்போகிறார் என்றெல்லாம் வந்த தகவல்களை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எனவே சினிமாவில் அவர் இன்னும் பல வருடங்கள் இயங்குவார் என்பது உறுதியானது.
கருப்பு சூப்பர் ஹிட்: அவரது கரியரை பொறுத்தவரை வெற்றியையே பெரும்பாலும் பார்த்திருக்கிறார். கடந்த வருடம்தான் அவருக்கு சரியாக அமையவில்லை. இத்தனைக்கும் குட் பேட் அக்லி, தக் லைஃப், விடாமுயற்சி என மூன்று பெரிய படங்களில் நடித்திருந்தார். அந்த மூன்று படங்களுமே தோல்விதான். இந்த வருடம் அவருக்கு கருப்பு திரைப்படம் மூலம் வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.
சர்ச்சைகளில் திரிஷா: இப்படி அவரது கரியர் சூப்பராக போய்க்கொண்டிருக்கும் நிலைமையில்; திரிஷாவின் பெயர் சர்ச்சையிலும் சிக்குகிறது. முக்கியமாக விஜய்யிடமிருந்து அவரது மனைவி விவாகரத்து கேட்ட விஷயத்தில்; அம்மணியின் பெயர் பலமாகவே அடிபட்டது. அதிலும் விஜய்யும் திரிஷாவும் ஜோடியாக ஒரே நிறத்திலான உடையை அணிந்துகொண்டு வந்திருந்ததும்; விஜய் முதலமைச்சராக பதவியேற்றபோது திரிஷா எமோஷனல் ஆனதையும் பார்த்து பலரும் பல விதமாக பேசுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக கடந்து செல்கிறார்கள்.
திரிஷா இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இப்படி அவரை சுற்றி பலத்த சர்ச்சைகளும், கிசுகிசுக்களும் எழுந்தாலும் அவர் ரொம்பவே கூலாக அதனை ஹேண்டில் செய்துவருகிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அதாவது தனது வீட்டு செல்ல நாய்க்குட்டிக்கு தொப்பியெல்லாம் போட்டுவிட்டு; சீவி சிங்காரித்த புகைப்படத்தைதான் பகிர்ந்திருக்கிறார். அது பார்ப்பதற்கு அவ்வளவு க்யூடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
