என்ன வேணா நடக்கட்டும் சந்தோஷமா இருப்பேன்.. பாய் பெஸ்ட்டியோடு Chill செய்யும் திரிஷா.. மேடம் வேற லெவல்

சென்னை: மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமாகி இன்னும் லைம் லைட்டில் இருப்பவர் திரிஷா. அதை பார்த்து அனைவாருமே ஆச்சரியப்படுகிறார்கள். தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அது தேர்தல் முடிந்த கையோடு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்திருக்கும் விஸ்வம்பரா திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகவிருக்கிறது. இரண்டு படங்களின் மீதும் அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்.

ஏஜிஎஸ் வீட்டு திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்யும், திரிஷாவும் ஒரே கலரில் உடை போட்டுக்கொண்டு; ஒரே காரில் திருமணம் நடக்கும் மண்டபத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் அப்படி வந்ததை பார்த்து அங்கே இருந்தவர்கள் உச்சக்கட்ட ஷாக் அடைந்தார்கள். ஆனால் வெளியே காண்பித்துக்கொள்ளவில்லை. இரண்டு பேரும் ஜோடியாக நின்ற புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் லீக்காக; எங்கும் காட்டு தீ போல் பற்றிக்கொண்டது இந்த விஷயம்.

Trisha Krishnan s Insta Post Trends Amid Vijay Wedding Controversy
Photo Credit:

தொடரும் விவாதங்கள்: ஏற்கனவே சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை திரிஷாவாக இருக்குமோ என சந்தேகப்பட்ட சூழலில்; சந்தேகம் ஏன் படுகிறீர்கள்; நானே உறுதி செய்கிறேன்; அது திரிஷாதான் என்பதுபோல் அமைந்துவிட்டது விஜய்யின் நடவடிக்கை. இது அவரது பெர்சனல் விஷயம்தான் என்றாலும்; தேர்தல் நடக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் போது; கட்டிய மனைவி இப்படி நிற்கையில்; இன்னொரு நடிகையுடன் வருகை தந்தது அவசியமான ஒன்றுதானா என தவெகவினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

வொர்த் இல்லை என சொன்ன விஜய்: இதற்கு என்ன மாதிரியான பதிலை கொடுக்கப்போகிறார் விஜய் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், சங்கீதா பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டு, 'நீங்கள் இதற்காகவெல்லம் கவலைப்படாதீர்கள். அது அவ்வளவு வொர்த்தெல்லாம் இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன்' என அலட்சியமாக பேசியது; மேலும் அவர் மீதான அதிருப்தியை உண்டு செய்தது. எப்போது நீங்கள் திரிஷாவை விட்டு விலகுகிறீர்களோ அப்போதுதான் உங்களுக்கும், கட்சிக்கும் நல்லது என பலரும் அட்வைஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள்.

மௌனம் காக்கும் திரிஷா: இதுகுறித்து திரிஷா தரப்பிலிருந்து எந்தவிதமான ரியாக்‌ஷனோ, பதிலோ வரவில்லை. மாறாக; பார்த்திபன் பேசியதற்கு மட்டும் அவர் காண்டாகி கண்டனம் தெரிவித்தார். அதற்கு பார்த்திபனும் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து இந்த விஷயம் புகைந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றுகூட சென்னை விமான நிலையத்துக்கு வந்த திரிஷாவிடம்; விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இம்மியளவுகூட திரும்பி பார்க்காமல் லாடம் கட்டியது போல் நேராக போய்க்கொண்டே இருந்தார். கேள்வி கேட்டு செய்தியாளர்கள் வெறுத்து போய்விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டா பதிவு: இந்நிலையில் திரிஷாவின் இன்ஸ்டா பதிவு ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தனது பாய் பெஸ்ட்டி சிட்னி சிலேடன் உள்ளிட்டோருடன் ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்று சூப்பராக சில் செய்திருக்கிறார். மேலும் அவர்களுடன் ஜாலியாக புகைப்படங்களும் எடுத்து தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, இங்கே பிரச்னை தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் பாய் பெஸ்ட்டியோடு ஜாலியாக இருக்கிறீர்களா?.. அப்படியே இருந்துகொள்ளுங்கள்; விஜய் பக்கம் வராதீர்கள் என்று சரமாரியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X