கட்டிப்பிடித்து ஜாலியாக இருக்கும் திரிஷா.. போஸ்லாம் சூப்பரா இருக்கே.. மேடம் இப்படி ஜாலியா இருக்காங்களே
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. மௌனம் பேசியதேதான் அவர் நடித்து வெளியான முதல் படமாகும். இடையே பல வெற்றிகளையும், சில தோல்விகளையும் பார்த்த அவர்; அறிமுகமாகி 20 வருடங்கள் கழித்தும் டயர் 1 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய்யுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்ததிலிருந்து; திரிஷா என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடுகிறது. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
மாடலாக இருந்த திரிஷாவுக்கு லேசா லேசா படத்தின் மூலம் திரையுலக கதவுகள் திறந்தன. ஆனால் அந்தப் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட; சூர்யாவை வைத்து அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் நடித்து அறிமுகமாகிவிட்டார் திரிஷா. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த சாமி, கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துவிட்டன. இதன் காரணமாக சரசரவென்று குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.

மற்ற மொழியில் திரிஷா: தமிழில் எப்படி அவரது வளர்ச்சி படு வேகமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்ததோ அதே போன்ற வளர்ச்சியை தெலுங்கிலும் அடைந்தார். அந்த சமயத்தில்தான் அவருக்கும், நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும், ராணாவின் குடும்பம் பாரம்பரிய குடும்பம் என்பதால் இந்தக் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை எனவும், அவர்களால்தான் தெலுங்கில் திரிஷாவுக்கான பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுவது உண்டு.
இப்போதும் பிஸி: தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதை 96 படத்தில் சரி செய்துவிட்டு பொன்னியின் செல்வன் 1, 2, விடாமுயற்சி, லியோ, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் அத்தனை படங்களுமே ஒன்று சுமார் வரவேற்பை பெற்றன அல்லது தோல்வியை சந்தித்திருக்கின்றன. அடுத்ததாக சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவரது பெயர் பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது.
விஜய்யுடன் கிசுகிசு: அதாவது விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து சில நாட்களிலேயே திரிஷாவும், விஜய்யும் ஜோடியாக ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். இத்தனை வருடங்களில் முதன்முறையாக அவர்கள் அப்படி செய்தது பல சந்தேகங்களுக்கு வித்திட்டுவிட்டது. ஆனால் இதுகுறித்தெல்லாம் அம்மணி கவலைப்படுவதாக இல்லை. தொடர்ந்து சோஷியல் மீடியவில் படு ஆக்டிவ்வாக இருக்கிறார். அவரிடம் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டாலும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்றுவிடுகிறார். விஜய்யை விட்டு விலகிவிடுங்கள் என்பது தவெகவினரின் கோரிக்கையாக இருக்கிறது.
திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: சமீப நாட்களாக திரிஷா என்ன செய்தாலும் அது தலைப்பு செய்தியாக மாறிவிடுகிறது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார். அதில் தனது ஒருவரை கட்டியணைத்த படி போஸ் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படம்தான் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அதை பார்த்த பலரும், செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி கூலாக இருக்கிறாரே என ஆதங்கத்தில் கமெண்ட்ஸ்கள் எல்லாம் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications















