கருப்பு படத்தில் விஜய்யை இமிட்டேட் செய்த திரிஷா?.. ஆஹா இது லிஸ்ட்லையே இல்லையே பாஸ்
சென்னை: திரிஷா நடிப்பில் கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை படக்குழுவுக்கு மட்டுமின்றி சூர்யாவின் ரசிகர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் சச்சின் படத்தில் விஜய் செய்தது மாதிரியே திரிஷாவும் இந்தப் படத்தில் செய்திருக்கிறார் என்று இணையத்தில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
திரிஷாவும், விஜய்யும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஒன்றுக்கு மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு வந்தார்கள். அந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்புதான் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அதுமட்டுமின்றி ஒரு நடிகையுடன் தன் கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் அம்மனுவில் கூறியிருந்தார். பலரும் சந்தேக பார்வையை திரிஷா மீது திருப்பிய நிலையில்தான் அவர்கள் இப்படி ஜோடியாக வந்தார்கள்.

கூல் திரிஷா: பல தகவல்கள் அவர்கள் குறித்து வட்டமடித்தாலும் திரிஷா ரொம்பவே கூலாகத்தான் இருக்கிறார். சமீபத்தில் கூட மே (என்) மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். அவரது அந்தப் பதிவை பார்த்த பலரும், திரிஷா ஏதோ பெரிய பிளானில் இருக்கிறார் என்று கூற தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர் எதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார்.
திரிஷாவின் லைன் அப்: அவரது லைன் அப்பை பொறுத்தவரை சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்தில் நடித்திருக்கிறார். கருப்பு படம் மே 14ஆம் தேதியும், விஸ்வம்பரா படம் அடுத்த மாதமும் ரிலீஸாகவிருக்கின்றன. இவை தவிர்த்து சித்தார்த்துக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இவை தவிர்த்து இன்னும் சில படங்களை அவர் தன் கைவசம் வைத்திருப்பதாகவும்; ஒவ்வொரு அறிவிப்பாக வரும் என்றும் திரைத்துறையில் கூறுகிறார்கள்.
இதிலும் சர்ச்சைதான்: திரிஷாவை சுற்றி சமீபத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவாகின. அவற்றில் லேட்டஸ்ட்டாக இணைந்தது என்றால் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்தப் படத்தின் ஆடியோ லான்ச்சில் திரிஷா கலந்துகொள்ளாதது பல பேச்சுக்களை கிளப்பியது. முக்கியமாக திரிஷா, 'நானே கருப்பு படத்தில் நடித்ததை மறுத்துவிட்டேன். அவர்களுக்கு இப்போதாவது நினைவுபடுத்துவது நல்லது. எனக்கு அனுப்பிய இன்விட்டேஷன் மெயில் தொலைந்து போயிருக்கும்' என அதிரடியாகவும், கிண்டலாகவும் தெரிவித்திருந்தார்.
விஜய் போல் திரிஷா?: இந்நிலையில் கருப்பு படத்தில் திரிஷா நடித்திருப்பதை வைத்து இன்னொரு விவாதமும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு கருப்பு படத்தில் திரிஷா நடித்திருக்கும் கேரக்டர் அறிமுக வீடியோ வெளியானது. படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வீடியோவில் ஒரு இடத்தில் சச்சின் படத்தில் விஜய், 'இந்தா வரேன்' என்பதை சைகையில் அவ்வளவு க்யூட்டாக சொல்லியிருப்பார். அதேபோன்ற ஒரு செய்கையை திரிஷாவும் செய்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ, விஜய் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி இப்படி ஒரு சீனை வைத்திருப்பாரோ என்று கமெண்ட்ஸ்கள் வந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications
