திரிஷாவுக்கு இத்தனை காதலர்களா?.. அவர் சொன்ன காதலர் தின வாழ்த்து.. எதை பற்றியும் கவலை இல்லை
சென்னை: திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடந்த வருடத்தில் அவர் நடித்த குட் பேட் அக்லி, விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. அதேசமயம் திரிஷாவின் நடிப்புக்கு நல்ல பெயரே கிடைத்தது. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் சொல்லியிருக்கும் காதலர் தின வாழ்த்து ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களாக முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார் திரிஷா. இடையில் அவருக்கு ஏற்பட்ட சறுக்கலை 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து சரிக்கட்டினார். நயனும் திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணத்துக்கு பிறகு நடித்தாலும் முன்னர் போல் அவரது மார்க்கெட் உச்சத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது. அந்த கேப்பை திரிஷா சரியாக பயன்படுத்திக்கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கடந்த வருடத்தில் மூன்று படங்கள்: கடந்த வருடத்தில் மட்டும் அவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். மூன்று படங்களிலுமே முன்னணி ஹீரோக்கள்தான் நடித்திருந்தார்கள். அவை மூன்று பெரிய படங்களாக இருந்தாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் திரிஷாவின் நடிப்புக்கு நல்ல அப்ளாஸே கிடைத்தது. அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் இன்னும் பல வருடங்களுக்கு திரிஷாவின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியாது என்று அடித்து சொல்ல ஆரம்பித்தார்கள்.
அடுத்த படம்: இந்த வருடத்தில் அவர் நடிப்பில் கருப்பு படம் வரவிருக்கிறது. இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். ஏற்கனவே சூர்யாவுக்கு ஜோடியாக மௌனம் பேசியதே, ஆறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. எனவே இந்த முறையும் சூர்யாவுக்கு திரிஷா ஜோடியாக நடித்திருப்பதால் கண்டிப்பாக அந்த சென்ட்டிமென்ட் படி கருப்பு ஹிட்டாகும் என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். படமானது இன்னும் சில மாதங்களில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மொழிகளிலும்: தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் திரிஷா பிஸியாகவே இருக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கும் விஸ்வம்பரா திரைப்படம் கடந்த வருடமே வந்திருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸாகாமல் இருக்கிறது. அநேகமாக இந்த வருடத்தின் கோடை விடுமுறையில் படம் வரும் என தெரிகிறது. நிச்சயம் இந்தப் படமும் ஹிட்டாகி தெலுங்கு திரைத்துறையிலும் அவரது மார்க்கெட்டை மேற்கொண்டு உயர்த்தும் என நம்பப்படுகிறது.
திரிஷா சிங்கிள்தான்: இதற்கிடையே திரிஷாவுக்கு வயது 42 ஆகிறது. ஆனால் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து அது திருமணம் வரை செல்லவில்லை. அதற்கு பிறகு சிங்கிளாகவே இருக்கிறார். அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்துவருகிறார்கள். ஆனால் திரிஷா அதுகுறித்து எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்துவருகிறார்.
காதலர் தின வாழ்த்து: இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் நாய்க்குட்டிகள் புகைப்படங்களை பகிர்ந்து எல்லாமே என்னுடையதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த வாழ்த்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் அந்த போஸ்ட்டை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கவும் செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











