K Bye.. திரிஷாவின் இன்ஸ்டாவை பார்த்தீங்களா?.. என்ன சொல்ல வராங்க?.. மேடம் செம ஜாலிதான் போங்க
சென்னை: திரிஷாவும், விஜய்யும் ஒன்றாக திருமணம் ஒன்றுக்கு வந்தது பெரிய பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்து இரண்டு பேருமே அமைதியே காக்கிறார்கள். பார்த்திபன் பேசியதற்கு மட்டும் திரிஷா கண்டனத்தை பதிவு செய்தார். ஆனால் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் யாருமே இல்லை. ஒன்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவருக்கு எதிராகத்தான் அனைவருமே கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான திரிஷா கடந்த சில வருடங்களாக எந்த விதமான சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு, நடிப்பு உண்டு, தோழர்கள் தோழிகளுடன் பார்ட்டி உண்டு என ஜாலியாக இருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா நீதிமன்றம் சென்றார். அதோடு தான் தாக்கல் செய்த மனுவில், 'எனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இரண்டு பேரும் ஒன்றாக வெளிநாடு சென்ற புகைப்படங்களை நடிகையே பகிர்ந்திருந்தார்' என தெரிவித்திருந்தார்.

அந்த நடிகை திரிஷாவா?: அவரது குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், விஜய்யுடன் ஆஃப் ஸ்க்ரீனில் இருக்கும் புகைப்படங்களை திரிஷாதான் கடந்த சில வருடங்களுக்குள் பகிர்திருந்தார். எனவே சங்கீதா குறிப்பிடும் நடிகை திரிஷாதானோ என எல்லோரும் சந்தேகப்பட்டார்கள். அந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக; விஜய்யும், திரிஷாவும் மேட்சிங்காக உடை அணிந்துகொண்டு ஜாலியாக ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார்கள். அது மேற்கொண்டு இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மௌனம் காக்கும் குந்தவை: பலரும் இந்த விஷயத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூழலில்; பார்த்திபனும் தன் பங்குக்கு, 'குந்தவையை வீட்டிலேயே குந்த வையுங்கள்' என சொன்னார். அதற்கு மட்டும் கொந்தளித்த திரிஷா கண்டனம் தெரிவித்தார். அதனையடுத்து பார்த்திபனும் சில வீடியோக்களை வெளியிட்டுவிட்டு; இனிமேல் இதை பேசுவது வேண்டாத வேலை என உணர்ந்து நிறுத்திவிட்டார். நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கினார் திரிஷா. அப்போது அவரிடம் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக விமானம் ஏறுவதற்கு சென்றுவிட்டார்.
விஜய் காரா அது?: மேலும் நேற்று அவர் விமான நிலையத்துக்கு வந்திறங்கியது விஜய்யின் பிஎம்டபிள்யூ கார் என சொல்லப்படுகிறது. பனையூர் அலுவலகத்தில் அதே மாதிரியான காரிலிருந்து விஜய் இறங்கிய புகைப்படத்தையும், விமான நிலையத்தில் திரிஷா இறங்கிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு; கண்டிப்பாக இரண்டும் ஒரே கார்தான். தாங்கள் இரண்டு பேரும் நெருக்கமாகத்தான் இருக்கிறோம் என்பதை நாளுக்கு நாள் திரிஷா நிரூபித்துவருகிறாரே என்று காட்டத்துடன் பேசிவருகிறார்கள் விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும்.
திரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி: ஆனால் திரிஷா அதையெல்லாம் தன்னுடைய காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. எப்போதும் போல செம கூலாகத்தான் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட தனது தோழர்கள் மற்றும் தோழிகளுடன் ஜாலியாக ரெஸ்டாரண்ட் சென்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இப்போது புதிய ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது சாக்லேட் இருக்கும்படி ஒரு புகைப்படத்தையும், சாக்லேட்டை சாப்பிட்ட பிறகு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து K Bye என கேப்ஷன் போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, திரிஷா அந்த சாக்லேட்டுக்கு பாய் சொல்கிறாரா இல்லை வேறு யாருக்கேனும் பாய் சொல்கிறாரா என கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















