Trisha: தூக்கமின்மையால் அவதிப்படுகிறேன்.. இன்ஸ்டாவில் புலம்பும் த்ரிஷா!

சென்னை: த்ரிஷா என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றாலே த்ரிஷா என மாறியிருக்கும் நிலையில், த்ரிஷா இன்ஸ்டாகிராமில் என்ன பகிர்ந்தாலும் அது இணையத்தில் வைரலாகவும், பேசுபொருளாகவும் ஆகி விடுகிறது. அந்த வகையில் த்ரிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் பதிவை பார்த்த பலரும் த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா: ஜோடி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஆரம்பித்த த்ரிஷாவின் பயணம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இன்றும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கிறார் த்ரிஷா. இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த போது, இனிமேல் த்ரிஷா கேரியர் முடிந்து விட்டது என பேசப்பட்டது. ஆனால். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் கம் பேக் கொடுத்தார் த்ரிஷா. அதைத் தொடர்ந்து லியோ, குட் பேட் அக்லி, விடாமுயற்சி என அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவிற்கு ஜோடியாக கருப்பு படத்தில் த்ரிஷா நடித்துள்ளார் இந்த படம் அடுத்த மாதம் மே 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

Trisha instagram
Photo Credit:

புலம்பல்: இப்படி டாப் நடிகையாக தனது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் த்ரிஷா குறித்தும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் குறித்தும் பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. இதனால் த்ரிஷா எது செய்தாலும் அதை ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அந்த பதிவில், ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும். அப்படி கணக்கு பார்த்தால், 2062 இல் தான் நான் நன்றாக உணர்வேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் த்ரிஷா தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும், த்ரிஷா ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும் அதில் இருந்து மீண்டு த்ரிஷா நன்றாக தூங்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X