Trisha: த்ரிஷாவுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சு போல.. இப்படி எல்லாம் த்ரிஷாவைப் பார்த்ததே இல்லையே!
மும்பை: நடிகை த்ரிஷா தற்போது மும்பையில் உள்ளார். கடந்த மார்ச் 13ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்குச் சென்றவர் அங்கு இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். த்ரிஷா மார்டன் டிரஸ் மற்றும் சேலைகள் என இரண்டையும் அதிகம் விரும்புபவர். அதுவும் சேலைகளையும் அதற்கு மேட்சிங்கான பிளவுஸ் போன்றவற்றை மிகவும் ஸ்டைலாக அணியக் கூடியவர். அப்படி இருக்கையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள்ர்.
அதுவும் த்ரிஷா தான் சேலை அணிந்து கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, அதற்கு இளையாராஜாவின், பூமாலையே தோள் சேரவா என்ற பாடலையும் வைத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் த்ரிஷாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு போலயே என்று கேட்டு வருகிறார்கள். அதுவும் த்ரிஷா திருமண மணப்பெண்கள் அணியும் நகைசெட்டைப் போல நகைகள் அணிந்திருப்பதால், பலரும் த்ரிஷாவுக்கும் கல்யாண ஆசை வராமல் இருக்குமா என்று கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மொரட்டு சிங்கிள்: தமிழ் சினிமாவில் மொரட்டு சிங்கிள்கள் என்று சொல்லப்பட்ட பிரேம் ஜிக்கு திருமணம் ஆகிவிட்டது. விஷாலும் நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயம் செய்து கொண்டுவிட்டார். தமிழ் சினிமாவில் அடுத்து உள்ள மொரட்டு சிங்கிள் என்றால் அது நடிகர் சிம்புதான் என்று பலரும் கூறி வருவார்கள். ஆனால் ரசிகர்கள் பலரும் நடிகர்களைத்தான் இந்த பட்டியலில் வரிசைப்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் மற்றொரு முரட்டு சிங்கிள் என்றால் அது த்ரிஷா தான். கிட்டத்தட்ட 43 வயதாகும் த்ரிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கலாய்த்த த்ரிஷா: அவ்வப்போது நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் என்று வதந்திகள் எல்லாம் வந்துள்ளது. ஒருகட்டத்தில் அந்த மாப்பிள்ளை யார் என்று எனக்காவது சொல்லுங்களேன் என்று அவரே ஒரு கட்டத்தில் அவரே அந்த வதந்திகளை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து பூமாலையே தோள் சேரவா போன்ற பாடலைப் இணைத்துள்ளதால் ரசிகர்கள் பலரும் த்ரிஷாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











