ஏர்போர்ட் வந்த திரிஷா.. விஜய் பற்றிய கேள்விக்கு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?.. குந்தவைக்கு சரியான கல் நெஞ்சம்

சென்னை: விஜய்யும், திரிஷாவும் ஒரு திருமணத்துக்கு ஜோடியாக கலந்துகொண்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்ட நடிகை பற்றி எங்கும் விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருந்த சூழலில்; இரண்டு பேரும் அப்படி செய்ததை பெரும்பாலானோர் விரும்பவில்லை. திரைத்துறையின் உள்ளேயிருந்தும், வெளியே இருந்தும் அவருக்கு எதிர்ப்புகளே வலுத்திருக்கின்றன. முக்கியமாக திரிஷாவை அனைவருமே சரமாரியாக விமர்சித்துவருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா; இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார். அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக அவர் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அநேகமாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இந்தப் படம் தவிர்த்து தெலுங்கிலும் அவர் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அவரது கரியர் பிஸியாக இருக்கும் நிலையில்; விஜய் விவகாரத்தில் அவரது பெயர் தலைப்பு செய்தியாக மாறியிருந்தது.

Trisha Krishnan Stays Silent as Questions Mount Over Wedding Appearance With Vijay
Photo Credit:

என்ன ஆனது?: அதாவது விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று கோரியிருந்த சங்கீதா; தனது கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அனைவருமே அந்த நடிகை யார் என்று தேடலில் ஈடுபட்டார்கள். சிலர் திரிஷா மீது சந்தேகப்பட்டார்கள். நிலைமை இப்படி இருக்க திடீரென விஜய்யும், திரிஷாவும் ஒரே கலர் டோனில் ட்ரெஸ் போட்டு; திருமணம் ஒன்றுக்கு ஒரே காரில் வந்திறங்கினார்கள். அது அனைவருக்குமே அதிர்ச்சியை கிளப்பியது.

எழுந்த விமர்சனங்கள்: அவர்கள் அப்படி ஜோடியாக வந்தது அதிர்ச்சியை மட்டுமின்றி கண்டனங்களையும் பெற்றது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவே இமேஜை டேமேஜ் செய்த சூழலில்; திரிஷாவுடன் விஜய் வந்திருக்கவே கூடாது என்றும்; இப்படி செய்ததற்கெல்லாம் தங்களால் முட்டு கொடுக்க முடியாது என்றும் ஓபனாக போட்டுடைத்தார்கள் தவெகவினர். மேலும் தங்கள் தளபதியின் வாழ்க்கையை அழிக்க வந்தவர்தான் திரிஷா என்றும் கொதித்து போய் பேசினார்கள்.

Also Read
ரசிகர்களை பயன்படுத்தாத பீரங்கி அஜித்.. திரிஷாவுக்கு மட்டுமில்லை.. விஜய்க்கும் பார்த்திபன் செம அடி
ரசிகர்களை பயன்படுத்தாத பீரங்கி அஜித்.. திரிஷாவுக்கு மட்டுமில்லை.. விஜய்க்கும் பார்த்திபன் செம அடி

பதிலடி கொடுத்த திரிஷா: சாமானியர்கள்தான் இப்படி என்றால் திரைத்துறையிலும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்திருக்கின்றன. சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்டோர் எல்லாம் டைரக்ட்டாகவே அட்டாக் செய்தார்கள். அவற்றில் பார்த்திபனின் பேச்சுக்கு மட்டும் தனது பதிலடியை கொடுத்திருந்தார். அதற்கு விளக்கமளித்து பார்த்திபனும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து சில வீடியோக்களை வெளியிட்ட பார்த்திபன்; இனிமேல் இதுகுறித்து பேசப்போவதில்லை என்று கூறி முற்றுப்புள்ளியும் வைத்தார்.

திரிஷாவின் மௌனம்: இந்நிலையில் இந்த விஷயத்தில் திரிஷாவின் பதில் என்னவாகத்தான் இருக்கும் என தெரிந்துகொள்ள அனைவருமே ஆர்வமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் இன்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள், விஜய்யுடன் திருமணத்தில் பங்கேற்றது பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். ஆனால் எதற்குமே அசைந்துகொடுக்காத திரிஷா; எந்தவிதமான ரியாக்‌ஷனும் கொடுக்காமல் மௌனமாக சென்றுவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள், திரிஷாவுக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X