Trisha: கோயிலுக்குள் நாயை அழைத்துச் சென்றாரா த்ரிஷா?.. இப்படி சர்ச்சையில் சிக்கீட்டாரே!
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் கடந்த மாதம் நடிகர் விஜய் உடன் இணைந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜயின் விவாகரத்து வழக்கு தொடர்பான தகவல் வெளியாகி பலரும் அதிர்ச்சியில் இருந்த ஒரு வாரத்திற்குள் ஆகவே விஜயுடன் இணைந்து திருமண நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.
விஜயுடன் இணைந்து திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தமிழ்நாடு பாஜக தலைவர் திருஷா மற்றும் விஜய் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இதை கண்டித்து திரிஷா தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை குறிப்பிடாமல் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில் நடிகர் விஜயின் பெயரும் அடிபட்டிருந்தாலும் விஜய் இது தொடர்பாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

சர்ச்சை: திரிஷாவை சுற்றி எப்போதும் ஏதாவது ஒன்று பரபரப்பாகவே நடைபெற்று வருகிறது. அரசியல் தளத்தில் அவரது பெயர் அவ்வப்போது அடிபடுகிறது. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் திரிஷா தற்போதும் முரட்டு சிங்கிளாகவே வளம் வருகிறார். திரிஷா செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் குறிப்பாக நாய்க்குட்டி வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில் அவர் தற்போது வளர்த்து வரும் ஒரு நாயுடன் அனுமன் ஜெயந்தியான ஏப்ரல் இரண்டாம் தேதி அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தனது செல்ல பிராணி முதல் முறையாக கோயிலுக்கு வருவதாக பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை: தனது செல்லப் பிராணியுடன் திரிஷா கோயிலுக்குச் சென்றதாக குறிப்பிட்டு இருந்தாலும், அவர் தனது செல்லப்பிராணியுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படம் ஆனது குளோசபில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் செல்ல பிராணியை கோயிலுக்குள் அழைத்துச் சென்றாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக பக்தர்கள் கோயில்கள் எப்படி ஒரு நாயை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் பைரவரை வணங்குவது என்பது என்பது நாயை தெய்வமாக வழிபடும் முறைதான். அப்படி இருக்கையில் நாயை கோயிலுக்குள் அழைத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

செல்பி: ஆனால் திரிஷா, தனது பதிவில் நாயை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார் என்றோ அல்லது செல்லவில்லை என்றெல்லாம் குறிப்பிடவில்லை. பொதுவாக தனது செல்லப்பிராணி முதல் முறையாக கோயிலுக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் திரிஷா பகிர்ந்து உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது அவர் அந்த புகைப்படத்தை அதாவது தனது செல்லப்பிராணியுடன் காருக்குள் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட தான் எடுத்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











