ஆசையை இப்படி வாய்விட்டு சொல்லாதீங்க த்ரிஷா, நடக்காமல் போய்விடும்

By Siva

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் த்ரிஷா.

த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான மோகினி படம் சரியாக போகவில்லை. பேய் படம் வந்தால் தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாக்காமல் ஓய மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

அவர்களுக்கே மோகினியை பிடிக்கவில்லையாம்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவுக்கு புது ஆசை வந்துள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்று. த்ரிஷாவுக்கு ஜெயலலிதா என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தான் அந்த இரும்பு மனுஷி கதாபாத்திரத்தில் நடிக்கத் துடிக்கிறார் த்ரிஷா. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சி நடந்து வரும் நேரத்தில் த்ரிஷா இப்படி கூறியுள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

சென்னையில் ஜெயலலிதா படித்த அதே பள்ளியில் தான் நானும் படித்தேன். எனக்கு 10 வயது இருக்கும்போது அவர் எங்கள் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை பார்த்ததில் இருந்து அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். நான் அவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தான் ட்விட்டரில் டிஸ்பிளே படமாக வைத்துள்ளேன் என்கிறார் த்ரிஷா.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். நான் ஜெயலலிதாவாக நடிக்க விரும்புவதால் எனக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். எனக்கு அரசியல் ஆசை இல்லை. நடிகையாக சந்தோஷமாக இருக்கிறேன், இதுவே எனக்கு போதும் என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

ஜோடி

ஜோடி

அனைத்து சீனியர் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட த்ரிஷாவுக்கு ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க ஆசை. ரஜினி படம் வரும்போது எல்லாம் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் பாவம் இன்னும் அவர் ஆசை நிறைவேறவில்லை. காலா போனால் என்ன கார்த்திக் சுப்புராஜ் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். ஆசையை வாய்விட்டு சொல்லாதீங்க த்ரிஷா, நடக்காமல் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X