'சாமி'க்காக மீண்டும் மாமி ஆகி த்ரிஷா புதிய சாதனை
சென்னை: சாமி படத்தின் இரண்டாம் பாகத்திலும த்ரிஷா தான் ஹீரோயின் என இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் சாமி. சாமி படத்தில் வந்த கல்யாணந் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா என்ற பாடல் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது.
சாமி வெளியான 13 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் ஹரி.

விக்ரம்
சாமி 2 படத்தில் விக்ரம் தான் ஹீரோ என்பது அனைவருக்கும் தெரியும். ஹீரோயினை ஹரி மாற்றிவிடுவாரோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாமி 2ன் ஹீரோயின் த்ரிஷா தான் என தெரிவித்துள்ளார் ஹரி.

2 ஹீரோயின்கள்
சாமி 2 கதைப்படி 2 ஹீரோயின்களாம். அதில் ஒருவர் த்ரிஷா மற்றொரு ஹீரோயின் தேர்வு செய்யப்பட்ட பிறகு தெரிவிப்போம் என்று ஹரி கூறியுள்ளார். எப்படியோ சாமிக்காக த்ரிஷா மீண்டும் மாமி ஆகிறார்.

த்ரிஷா
13 ஆண்டுகள் கழித்து ஒரு படத்தின் ரீமேக்கில் அதுவும் ஹீரோயினாகவே நடிக்கும் சாதனையை படைத்துள்ளார் த்ரிஷா. சாமி படம் மட்டும் ஹிட்டாகாமல் இருந்தால் சினிமாவை விட்டு போயிருப்பேன் என்று த்ரிஷா முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.3
ஹரி சூர்யாவை வைத்து இயக்கும் எஸ்.3 படத்தை முடித்த பிறகு சாமி 2 பட வேலைகளை துவங்க உள்ளார். சாமியை போன்றே சாமி 2 படமும் ஹிட்டாக வாழ்த்துக்கள் ஹரி, விக்ரம், த்ரிஷா.


Click it and Unblock the Notifications











