பட்டுப்புடவை, நகைகளில் மணப்பெண்ணாய் ஜொலிக்கும் த்ரிஷா!

By Mayura Akilan

கடந்த சில ஆண்டுகளாகவே த்ரிஷாவின் திருமண செய்திகள் ஊடகங்களில் அடிபடுவதும், பின்னர் அது த்ரிஷாவினாலும் அவரது அம்மாவினாலும் மறுக்கப்படுவதுமாக இருக்கிறது.

ராணாவுடன் காதல், ரகசியமாய் திருமணம் முடிந்து விட்டதாக எத்தனையோ செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை த்ரிஷா ஒத்துக்கொள்ளவே இல்லை.

ராணா யாரையாவது காதலிக்கிறார் என்று செய்தி வருகையில் அவரும், த்ரிஷாவும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தி தவறாமல் வரும். சமீபத்தில் கூட கன்னட நடிகையுடன் ராணாவை கனெக்சன் செய்து செய்தி போட்டிருந்தனர்.

மலேசியாவில் நடைபெற்ற சிமா விருது விழாவுக்கு ராணாவும், த்ரிஷாவும் ஜோடிபோட்டு சென்றனர். அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தியைப் பற்றி இருவருமே கருத்து தெரிவிக்கவில்லை.

தொழிலதிபருடன் நிச்சயம்

தொழிலதிபருடன் நிச்சயம்

இந்த கிசுகிசு முடிவதற்குள்ளாகவே தொழிலதிபருடன் த்ரிஷாவுக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாக அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளனர். அது நிஜமா அல்லது ஏதாவது சினிமாவிற்காக எடுக்கப்பட்டதா என்று கூறவில்லை த்ரிஷா.

இது எந்த படத்திற்கு?

இது எந்த படத்திற்கு?

சில மாதங்களுக்கு முன்பு கன்னட படம் ஒன்றில் திருமண கோலத்தில் போஸ் கொடுத்த த்ரிஷாவை பார்த்து அவரது திருமணம் முடிந்துவிட்டதாக செய்தி வெளியானது. அதுவும் பொய்யாகிப் போனது.

மணப்பெண்ணாய் த்ரிஷா

மணப்பெண்ணாய் த்ரிஷா

த்ரிஷாவுக்கு நிஜத்தில் திருமணம் நடக்க இன்னும் எத்தனை நாள் வேண்டுமானாலும் ஆகட்டும். மணப்பெண்ணாய் அவர் தங்க நகைகள் அணிந்து பட்டுப்புடவை சரசரக்க கொடுத்துள்ள போஸ்கள் சும்மா அள்ளிக்கொண்டு போகிறது.

இது போட்டுக்கவா?

இது போட்டுக்கவா?

சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ள த்ரிஷா, தாலி கட்டும் முன்பாக நான்கு முறை நகைகளை மாற்றுவார். அவர் அணிந்திருக்கும் அத்தனை நகைகளும் பாந்தமாய் பொருந்தியிருக்கிறது.

ஜொலி ஜொலிப்பு

ஜொலி ஜொலிப்பு

அதேபோல பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்திற்காக பட்டுப்புடவை கட்டி நடித்திருக்கிறார். மாப்பிள்ளை யாருன்னு சொல்ல மாட்டேன் என்று அவரே அந்த விளம்பரத்தில் கூறுவார்.

யாரு அந்த மாப்பிள்ளை

யாரு அந்த மாப்பிள்ளை

சீக்கிரம் அந்த சீக்ரெட்டை சொல்லுங்க த்ரிஷா, நீங்க சொல்லாட்டி என்ன? கத்தரிக்கா முத்தினா கடை வீதிக்கு வந்துதானே ஆகணும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X