Trisha: த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மையா? தாயார் விளக்கம்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகி, விஜய் தொடங்கி இருக்கும் கட்சியில் சேரப்போவதாக இணையத்தில் செய்தி பரவிய நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் த்ரிஷாவின் அம்மா, த்ரிஷா அரசியல் கட்சியில் சேரப் போவதில்லை, உயிர் இருக்கும் வரை அவர் சினிமாவில் தான் இருப்பார் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் கல்லூரி தோழியாக நடித்திருந்த த்ரிஷா ப்ரியதர்ஷன் இயக்கியலேசா லேசா படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெளியாவதற்கு முன்பே அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம் வெளியாகி அதுவே த்ரிஷாவின் முதல் படமாக இருக்கிறது. முதல் படத்திலே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எக்பிரஸ் குயின் என வர்ணிக்கப்பட்ட த்ரிஷா, சாமி, கில்லி, மங்காத்தா என அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், ஆர்யா,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

trisha politics

நடிகை த்ரிஷா: தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வந்த த்ரிஷாவிற்கு திடீரென படவாய்ப்பே இல்லாமல் போன நிலையில், திடீரென மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவையாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் த்ரிஷாவிற்கு கம்பேக் படமாக மாறியது. அதன் தளபதி விஜய்யுடன் லியோ படத்திலும், கோட் படத்தில் விஜய்யுடன் மட்ட பாடலில் குத்தாட்டம் போட்டு இருந்தார்.

தற்போது,அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும், மோகன்லாலுடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து த்ரிஷா, மறுபக்கம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், த்ரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்த பிருந்தா என்ற வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

கடந்த வாரம், நடிகை த்ரிஷா சினிமா விட்டு விலகப் போவதாகவும், விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அரசியலில் குதிக்க போகிறார் என்ற இணையத்தில் பரவியது. இதனால், த்ரிஷாவின் ரசிகர்கள் விஜய்யை பார்த்ததும், உங்களும் அரசியல் ஆசை வந்துவிட்டதா என இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

த்ரிஷாவின் அம்மா விளக்கம்: இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், த்ரிஷா சினிமாவை விட்டு விலகப்போகிறார், தமிழக வெற்றிக் கழக்கத்தில் சேரப்போகிறார். அதிமுகவிலும் இணையப்போகிறார் என்று பரவி வரும் செய்தியில் உண்மை இல்லை. த்ரிஷா சினிமாவை மிகவும் நேசிக்கக்கூடியவர், நடிப்பை அவர் உயிராக நினைக்கிறார். எப்படி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு செல்வார்? அவர் உயிர் இருக்கும் வரை படங்களில் நடித்துக் கொண்டுதான் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இதனால், த்ரிஷாவின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

த்ரிஷா மற்றும் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது படம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X