ரசிகரின் மரணத்திற்காக வேதனையுடன் ட்வீட் போட்ட த்ரிஷா
சென்னை : வயதானாலும், தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்காவிட்டாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார் த்ரிஷா. கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து, பலரின் கனவு தேவதையாக ஜொலித்து வருகிறார் த்ரிஷா.
சோஷியல் மீடியாவில் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் இவரின் ரசிகர்கள் வைரலாக்கி, கொண்டாடி வருகின்றனர். இவரது ஃபோட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிவது வழக்கமாகி விட்டது.

ரசிகருக்காக வருந்திய த்ரிஷா
லேட்டஸ்ட் தகவலாக ரசிகர் ஒருவரின் மரணத்திற்காக ட்விட்டரில் வருத்தத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார் த்ரிஷா. கிஷோர் என்பவர் த்ரிஷாவின் அதி தீவிர ரசிகராம். இவரின் ட்விட்டர் கணக்கை கூட கிஷோர் த்ரிஷா ஃபேன் என்ற பெயரிலேயே வைத்துள்ளார். இவர் கொரோனா காரணமாக மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

த்ரிஷா போட்ட ட்வீட்
கிஷோர் தான் சோஷியல் மீடியாவில் த்ரிஷாவின் ஃபேன்ஸ் பக்கத்தை இயக்கி வந்தாராம். இவர் திடீரென உயிரிழந்தது தன்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டதாவும், அவரின் மரண செய்தியால் தனது இதயம் உடைந்து விட்டதாகவும், அவரை தனது சகோதரர் என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். இப்படி ஒரு ரசிகர் கிடைத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார் த்ரிஷா.

ரசிகர்கள் வேதனை
த்ரிஷா ரசிகர்கள் பலரும் கிஷோர் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு அளித்து வந்ததாகவும், தங்களிடம் த்ரிஷா பற்றி பேசுவதற்காக அவர் நேரம் ஒதுக்குவதாகவும், அவர் நேர்மையான மனிதர் எனவும் பாராட்டி உள்ளனர். ஃபேன் பேஜ் சிறப்பாக வளர்ச்சி பெற அவர் பெரிதும் உதவியதாகவும், அவர் மிகவும் மிஸ் செய்வதாகவும் ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் குந்தவை
த்ரிஷா, சமீபத்தில் தான் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவர் குந்தவை கேரக்டரில் நடித்திருப்பதாக இளைய திலகம் பிரபு தனது நெருங்கிய வட்டாரங்களில் பகிர்ந்துள்ளாராம். இந்திய அளவில் பிரபலமான நடிகர் - நடிகைகள் பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டு துவக்கத்திலேயே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











