ஹீரோயின்
திரிஷாவும் கவர்ச்சிப் பக்கம் திரும்பிவிட்டார்.
மிகச் சுமாரான, ஆர்பாட்டம் இல்லாத, அமைதியான முகத்துடன் இருந்தாலும் நல்ல நடிப்பு காரணமாக தமிழில்முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார் திரிஷா.
மனசெல்லாம் படத்தில் நடிப்பால் மனங்களைத் திருடியவர், சாமி படத்தில் புள்ளகுட்டி பெத்துகிட்டு கட்டிக்கலமாபாட்டு அசத்தில் டான்ஸ் போட்டார்.
இப்போது அலை படத்தில் கவர்ச்சிக்குத் தாவிவிட்டார். முடிந்தவரை இதில் ஆடைக் குறைப்பு செய்துள்ளதோடுசிலம்பரசனுடன் அநியாயத்துக்கு நெருக்கத்தைக் காட்டி நடித்து வருகிறார். கவர்ச்சிக்காக உடம்பையும் கொஞ்சம்குண்டு போட்டிருக்கிறார்.
மிக நைசான உடைகள், உடலை கெட்டியாகப் பிடிக்கும் உடைகள் என எப்படியெல்லாம் தன் அழகைவெளிக்காட்ட முடியுமோ அப்படியெல்லாம் காட்ட முயன்று வருகிறாராம். டைரக்டரே இந்த உடைகள் வேண்டாம்என்று சொன்னாலும் கேட்காமல் திரிஷாவே அந்த உடைகளை அணிந்து கொள்கிறாம்.
அமைதியாக நடித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, காட்ட வேண்டியதை காட்டினால் தான் தாக்குப் பிடிக்கமுடியும் என அவரது பள்ளித் தோழனும், படத்தின் ஹீரோவுமான சிலம்பரசன் சொன்னதின் பலன தான் இதுஎன்கிறார்கள்.
அடுத்த மாதம் வெளியாகப் போகிறது அலை. அப்போ பார்ப்போம் திரிஷா அப்படியென்ன கவர்ச்சிகாட்டியிருக்கிறார் என்பதை.


Click it and Unblock the Notifications











