»   »  அடுத்து விஜய் சேதுபதியுடன் டூயட் பாடத் தயாராகும் த்ரிஷா!

அடுத்து விஜய் சேதுபதியுடன் டூயட் பாடத் தயாராகும் த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் தோல்வி அல்லது நிச்சயதார்த்தம் நின்றுபோவது நடிகைகளுக்கு சென்டிமென்டாக ராசி போலிருக்கிறது. நயன்தாரா தொடர்ந்து சிக்சராக அடித்துக் கொண்டிருக்கிறார், தமிழ், தெலுங்கு, மலையாளத்தில்.

Trisha nods for Vijay Sethupathi project

அடுத்து த்ரிஷா. கைவசம் ஆறு முக்கிய படங்கள். இப்போது அடுத்து விஜய் சேதுபதி படம்.

ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கவிருக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதிதான் நாயகன். இருவரும் நீண்ட கால நண்பர்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்துக்கு ஒளிப்பதிவு பிரேம்குமார்தான்.

இந்தப் படத்துக்காக த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் பிரேம்குமார். கதை பிடித்ததால் உடனே சம்மதித்தவர், ஹீரோ விஜய் சேதுபதி என்றதும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம்.

English summary
Trisha's market is going strong now and the actress has okayed a new project with Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil