சூர்யாவுக்கு வாழ்த்து சொல்லாத த்ரிஷா.. கருப்பு டீசரையும் ஷேர் பண்ணலையே.. இதுதான் காரணமா?
சென்னை: தளபதி விஜய்க்கு Happy Birthday Bestest என நடிகை த்ரிஷா லேட் நைட் விஷ் பண்ணதும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. விஜய்க்கு சொன்னதை போலவே கருப்பு படத்தில் நடித்து வரும் நடிகை த்ரிஷா நடிகர் சூர்யாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வார் என்றும் அட்லீஸ்ட் கருப்பு படத்தின் டீசரையாவது தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து ப்ரோமோட் செய்வார் என எதிர்பார்த்த சூர்யா ரசிகர்களுக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது.
ஆர்ஜே பாலாஜி முதலில் த்ரிஷாவை லீடு ரோலில் வைத்து தான் மாசாணியம்மன் எனும் படத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால், அதற்கு நடுவே சூர்யாவை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த கதையை அப்படியே ஹீரோவுக்கான கதையாக மாற்றி கருப்பு எனும் டைட்டிலில் படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று வெளியான கருப்பு டீசர் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. ஆனால், நடிகை த்ரிஷா சூர்யாவுக்கு கடைசி வரை பிறந்தநாள் வாழ்த்து சொல்லாதது இன்னொரு பக்கம் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது.
அறிமுகமே சூர்யா படத்தில் தான்: லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அதற்கு முன்னதாக பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 2002ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை த்ரிஷா 23 ஆண்டுகளை ஹீரோயினாக கடந்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து ஆறு, மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள த்ரிஷா மீண்டும் கருப்பு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
விஜய்க்கு வாழ்த்து: கீர்த்தி சுரேஷ், த்ரிஷா என பல முன்னணி நடிகைகளும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னார்கள். நடிகை த்ரிஷா வெளியிட்ட லேட் நைட் வாழ்த்து கூட சோஷியல் மீடியாவில் டிரெண்டானது. அதே போல சூர்யாவுக்கும் அவர் வாழ்த்து சொல்வாரா? என்கிற கேள்விகளை காலை முதலே சூர்யா ரசிகர்கள் எழுப்பியும் கடைசி வரை த்ரிஷா சொல்லவே இல்லை.

மமிதா மறக்கல, த்ரிஷா சொல்லல: ஆனால், நடிகர் சூர்யாவுக்கு வெங்கி அட்லூரி படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து வரும் மமிதா பைஜு மறக்காமல் வாழ்த்து சொன்னார். அதே போல நடிகை கீர்த்தி சுரேஷும் கருப்பு படத்தின் போஸ்டரை ஷேர் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், கருப்பு படத்தில் ஹீரோயினாக சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள த்ரிஷா ஏன் ஒரு ட்வீட் அல்லது இன்ஸ்டாகிராம் போஸ்ட் கூட போடாமல் விட்டுவிட்டார் அப்படி என்ன பிஸி என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
இதுதான் காரணமா?: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட கருப்பு டீசரில் த்ரிஷா இருப்பது போன்று ஒரு சின்ன ஷாட் கூட காட்டாமல் முழுக்க முழுக்க சூர்யா மட்டுமே இருக்க வேண்டும் என டீசர் கட் செய்த நிலையில் தான் த்ரிஷா கடுப்பாகியிருப்பார் என்றும் சூர்யாவுக்கு வாழ்த்து சொல்லி அந்த டீசரை ஷேர் செய்யாமல் இருக்கவும் அதுதான் காரணமாக இருக்கலாம் என ரசிகர்களே புலம்ப ஆரம்பித்துள்ளனர். சோஷியல் மீடியாவில் சொன்னால் தான் வாழ்த்தா? சூர்யாவை தனிப்பட்ட முறையில் கூட சந்தித்தோ அல்லது போனில் அழைத்தோ கூட த்ரிஷா வாழ்த்து சொல்லியிருக்கலாம் என்றும் த்ரிஷா ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











