படத்தை பார்த்தால் இன்னும் ஷாக் ஆகிடுவீங்க.. ’சுகர் பேபி’ சர்ச்சை.. த்ரிஷா என்ன இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், இயக்குநர்கள் அவருக்கு கொடுக்கும் கதாபாத்திரங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட விமர்சனங்களை கிளப்பி வருகின்றன. கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற 'சுகர் பேபி' பாடலுக்கு த்ரிஷா நடனமாடிய நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சர்ச்சை சோஷியல் மீடியாவில் அதிகரித்துள்ளது. அதுகுறித்த கேள்விகளுக்கும் செம கூலாக புரமோஷன்களில் பதிலளித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

சினிமாவில் நடிகைகள் எந்தவொரு வேடமாக இருந்தாலும் ரொம்பவே சவாலாக ஏற்றுக் கொண்டு நடிப்பதையே விரும்புவார்கள். வானம் படத்தில் அனுஷ்கா, சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரங்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தாலும், ரசிகர்கள் மத்தியிலும் அந்த கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அளவுக்கு தங்கள் நடிப்புத் திறனை அந்த நடிகைகள் வெளிப்படுத்தியிருந்தனர்.

Trisha opens up fans will shock more after watching Thug Life movie

ஒரு ஹீரோயினின் வேலை வெறும் அழகு பொம்மையாக டூயட் பாடல்களில் நடிக்க மட்டுமே கிடையாது என்பதை பல முன்னணி நடிகைகளும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தக் லைஃப் படத்தின் டிரைலர் மற்றும் 'சுகர் பேபி' பாடல்களை பார்த்து ஷாக்கானவர்களுக்கு படத்தில் மேலும், பல சம்பவங்கள் காத்துக் கொண்டிருப்பதாக பதில் அளித்துள்ளார்.

25 ஆண்டுகளாக கலக்கும் த்ரிஷா: 1999ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். லேசா லேசா படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயின் வராததால், மாடலிங் செய்துக் கொண்டே நடித்துக் கொண்டிருந்த த்ரிஷாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்ததாக ராதா ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படம் தான் ஹீரோயினாக த்ரிஷாவுக்கு ரிலீஸ் ஆன முதல் படம். அன்று முதல் இன்று வரை இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள ஸ்வீட் பேபியான த்ரிஷாவை தக் லைஃப் படத்தில் சுகர் பேபியாக மாற்றியதை பார்த்து அவரது ரசிகர்களே ஷாக் ஆகியுள்ளனர்.

சிம்புவுக்கு சித்தியா?: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மீண்டும் விண்ணைத் தாண்டி வருவாயா மேஜிக்கை நிகழ்த்துவார் த்ரிஷா என ரசிகர்கள் எதிர்பார்க்க, கமல்ஹாசன் உடன் ரொமான்ஸ் செய்து நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள், அப்போ சிம்புவுக்கு த்ரிஷா சித்தியா? என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அண்டர்கவர் அதிகாரி: ஷீ வெப்சீரிஸில் அதிதி போஹங்கர் எப்படி விலைமாதுவாக சென்று அண்டர் கவர் ஆபரேஷன் செய்வாரோ அதே போல அசோக் செல்வன் டீமில் இருந்து செல்லும் அண்டர்கவர் அதிகாரி தான் த்ரிஷாவாக இருப்பார் என்றும் ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், விஜே ரம்யா சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் பேட்டியின் போது த்ரிஷாவிடம் கேட்ட கேள்விக்கு தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார் த்ரிஷா.

படத்தை பார்த்தா இன்னும் ஷாக் ஆவீங்க: இதுவரை படத்தில் இருந்து ஒரு 2 நிமிட காட்சிகளை தான் பார்த்துள்ளீர்கள். அதற்கே இப்படி ஷாக் ஆனால், எப்படி? படத்தை பார்த்தால் இன்னும் நிறைய ஷாக் ஆவீங்க. படம் ஜூன் 5ம் தேதி வெளியாகுது. அதற்கு பின்னர், என் கதாபாத்திரம் குறித்து பேசலாம் என்றார். வரும் மே 24ம் தேதி சாய் ராம் கல்லூரியில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. முன்னதாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்த நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை சாய் ராம் கல்லூரிக்கு மாற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X