மெகா ஸ்டார் படத்தில் இருந்து திடீரென விலகிய த்ரிஷா... இன்னொரு ஹீரோயின் நடிப்பதுதான் காரணமா?
ஐதராபாத்: சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் நடிகை த்ரிஷா திடீரென விலகியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சீனியர் நடிகையான த்ரிஷா, இப்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் படத்தில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா
இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவர் சிறப்பாக ஆடியுள்ளதாக சிரஞ்சீவி சமீபத்த்இல் பாராட்டி இருந்தார். இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர்.

மன்னிப்புக் கேட்டார்
ஆனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், பேச்சு வாக்கில், கேஷூவலாக வெளியிட்டு விட்டார் சிரஞ்சீவி. இது பரபரப்பானது. இதையடுத்து இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்டார் அவர். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிபபதாகக் கூறப்படுகிறது. அவர் ஜோடியாக இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார்.

5 வருடத்துக்குப் பிறகு
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து தான் விலகி விட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார், நடிகை த்ரிஷா.

வேறுபாடு காரணமாக
இதுபற்றி, 'சில நேரம் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் திடீரென வேறுவிதமாக மாறிவிடுகிறது. இதனால், படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

ஹீரோயின் கிடைப்பது
இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதும்தான் த்ரிஷா விலகியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. த்ரிஷா, ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயின் கிடைப்பது சிக்கலாகி உள்ள நிலையில், த்ரிஷா திடீரென விலகியது, படக்குழுவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











