»   »  இந்தியாவைப் பற்றித் தெரியாத நபர்களுக்கு கூட ரஜினியைத் தெரிந்திருக்கிறது! - த்ரிஷா

இந்தியாவைப் பற்றித் தெரியாத நபர்களுக்கு கூட ரஜினியைத் தெரிந்திருக்கிறது! - த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவைப் பற்றித் தெரியாதவர்கள் கூட சூப்பஸ் ஸ்டார் ரஜினிகாந்தைத் தெரிந்திருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

ரஜினியின் தீவிர ரசிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. சில ஆண்டுகளுக்கு முன் த்ரிஷா நடித்த ஒரு படத்தின் இசை வெளியீட்டை ரஜினிதான் தலைமையேற்று நடத்தித் தந்தார். அந்த நிகழ்ச்சியிலும் தான் எந்த அளவு ரஜினி ரசிகை என்பதைக் காட்டிக் கொண்டார்.

Trisha praises Rajini sky high

தனக்கு திருமணம் ஆவதற்குள் ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.

ரஜினியின் தீவிர ரசிகை என்ற முறையில் அவரிடம் ரஜினி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ரஜினி படத்தை முதல் முறையாகப் பார்த்ததிலிருந்தே அவரது தீவிர ரசிகை நான். இதே துறையில் இருப்பதால், அவர் படங்கள் ரிலீசுக்கு சில மணி நேரம் முன் பார்த்துவிடும் வெகு சில பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.

அவரை எங்கே பார்த்தாலும், அதை தோழுகளுடன் பகிர்ந்து கொண்டாலும் அவரது தீவிர ரசிகர்களுக்கு மத்தியில் இருப்பதைப் போலத்தான் தோன்றும். காரணம் பல வகையிலும் சென்னை என்றாலே ரஜினிகாந்த்தான் என்று ஆகிவிட்டது.

சென்னை என்றாலே நினைவிற்கு வரும் முதல் பெயர் ரஜினிகாந்த் தான். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என பல்வேறு உலக நாடுகளுக்கு இன்று சென்னை பற்றி தெரிந்துள்ளது என்றால், அது ரஜினி இங்கு இருப்பதால்தான்.

இந்தியாவைப் பற்றி தெரியாத நபர்களை கூட நான் சந்தித்திருக்கின்றேன், ஆனால் அவர்களுக்குக் கூட நம் சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தெரிந்திருக்கிறது," என்றார்.

English summary
Actress Trisha says many foreigners who hardly know India are identified Superstar Rajinikanth.
Please Wait while comments are loading...