Trisha: எந்த லெவலுக்கும் இறங்குறாங்க.. சும்மா விடமாட்டேன்.. திருப்பியடித்த திரிஷா.. ரசிகர்கள் ஆதரவு!
சென்னை: மன்சூர் அலி கான் பேச்சுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா தன்னை பற்றி தீயாக பரவி வரும் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கமாட்டார் என விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ட்வீட் போட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.
நடிகை திரிஷா பற்றி சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. இந்நிலையில், இந்த அவதூறு பேச்சை சும்மா விடமாட்டேன் என சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என திரிஷா தற்போது அதிரடியாக ட்வீட் போட்டிருக்கிறார்.

திரிஷா பற்றி மோசமாக: நடிகர் மன்சூர் அலி கான் விஜய் மற்றும் திரிஷா நடித்து கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். தனது சரக்கு படத்தின் புரமோஷனுக்காக திரிஷா பற்றி மோசமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனடியாக மன்சூர் அலி கானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரிஷா எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் போட்டார். திரிஷாவின் ட்வீட்டை பார்த்து விட்டு லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து மன்சூர் அலி கானுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆதாரமற்ற பேச்சு: அந்த விவகாரத்தில் மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டது போல வந்த செய்தியை பார்த்து விட்டு திரிஷா மன்னித்து விட்டார். இந்நிலையில், திரிஷா பற்றி படுமோசமான ஆதரமற்ற பேச்சு சமூகவலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், தற்போது இதற்கு அமைதி காத்தால் தன்னுடைய பெயரை மேலும் டேமேஜ் செய்வார்கள் என நினைத்த திரிஷா உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ரொம்பவே கீழ்த்தரமாக எந்த லெவலுக்கும் இறங்கி தரக்குறைவாக பேசி வருகின்றனர். அவர்களை சும்மா விடமாட்டேன். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ என்னுடைய லீகல் டீம் மூலம் விரைவில் எடுப்பேன் என நடிகை திரிஷா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னை பற்றி உலா வரும் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போல்டாக ட்வீட் போட்டுள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு: நடிகை திரிஷாவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு முழு ஆதரவை அளித்து வருகின்றனர். திரிஷா யாருக்கும் பயப்படுபவர் இல்லை என்றும் அவதூறு பரப்பியவர்கள் அதற்கான தக்க பலனை சீக்கிரம் அனுபவிப்பார்கள் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











