தயாரிப்பாளர் R.B.சௌத்ரிக்கு இரங்கல் தெரிவித்த திரிஷா.. ரொம்ப ஃபீல் செஞ்சுருக்காங்க.. நேரில் வருவாரா?

சென்னை: தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ரி தயாரிப்பாளர்களில் ஒருவர் R.B.சௌத்ரி. அவர் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று சென்னையில் இருக்கும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. நாளை இறுதி சடங்குகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை திரிஷா தயாரிப்பாளர் சௌத்ரிக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

மலையாளத்தில் திரைப்படங்களை தயாரித்துக்கொண்டிருந்த ஆர்.பி.சௌத்ரி அதற்கும் முன்னதாக நகை வியாபாரம் செய்தவர். மல்லுவிட்டில் குட் நைட் கொசு மேட் நிறுவனர் மோகனுடன் சேர்ந்து தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஒருகட்டத்தில் சூப்பர் குட் பிலிம்ஸிலிருந்து மோகன் வெளியேற முழுமையாக அந்த நிறுவனம் இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஏற்கனவே மோகனோடு சேர்ந்து நல்ல படங்களை தயாரித்த சௌத்ரி; தனியாகவும் அதே வேட்கையோடு செயல்பட ஆரம்பித்தார்.

Trisha Reacts to R B Choudary s Death Shares Emotional Condolence Message
Photo Credit:

தமிழில் மெகா ஹிட்டுகள்: அதன்படி தமிழில் புது வசந்தம் திரைப்படம் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக. தொடர்ந்து நாட்டாமை, சேரன் பாண்டியன், தித்திக்குதே, சூர்யவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, கோகுலம், லவ் டுடே (விஜய் நடித்தது), சொல்லாமலே, நீ வருவாய் என என எக்கச்சக்க படங்களை தயாரித்தார். அவை அனைத்துமே மெகா ஹிட்டுகளாகின. எப்போதுமே தான் தயாரிக்கும் படங்களின் கதைகளில் அதிக அக்கறை செலுத்தக்கூடியவர் சௌத்ரி. அதன் காரணமாகத்தான் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக சூப்பர் குட் பிலிம்ஸ் படங்கள் மாறின.

Also Read
சிவகார்த்திகேயன் கையில் அரிவாள்.. பாக்யஸ்ரீ போர்ஸ் கையில் மயிலிறகு.. சேயோன் பட்டையை கிளப்புதே
சிவகார்த்திகேயன் கையில் அரிவாள்.. பாக்யஸ்ரீ போர்ஸ் கையில் மயிலிறகு.. சேயோன் பட்டையை கிளப்புதே

அதிக இயக்குநர்கள்: அதேபோல் தமிழ் சினிமாவில் அதிக பேரை இயக்குநராக அறிமுகம் செய்ததும் சௌத்ரிதான். அதன் காரணமாகவே அவர் தமிழ் சினிமாவின் வேடந்தாங்கல் என்று அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அறிமுகப்படுத்தும் இயக்குநர்களை ரொம்பவே கம்ஃபர்டபுளாகவும் வைத்திருப்பார் என்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் சொல்லியிருப்பதுண்டு. அதிலும் இயக்குநர் விக்ரமன் தான் கொடுக்கும் பேட்டிகள் பெரும்பாலானவைகளில் சௌத்ரி குறித்து பேசியிருப்பார்.

உயிரிழந்த சௌத்ரி: சூழல் இப்படி இருக்க தனது நிறுவனத்துக்காக 100ஆவது படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கியிருந்தார். முதலில் அந்தப் படத்தில் விஜய்தான் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் நடக்கவில்லை. அடுத்தடுத்த பணிகளில் மும்முரமாக இருந்த அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பியாவர் மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு காயம் இல்லையென்றாலும்; விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்திருக்கிறார்.

திரிஷாவின் இரங்கல்: அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று மதியம் அவர் சென்னையில் இருக்கும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ரொம்பவே துயரம் தரக்கூடிய செய்தி. நல்ல மனம் கொண்ட ஒருவர இழந்துவிட்டோம். ஜீவாவின் குடும்பத்துக்கு என்னுடைய இரங்கல்" என்று குறிப்பிட்டிருக்கிறார். சௌத்ரிக்கு நாளை இறுதி சடங்குகள் நடக்கவிருக்கின்றன. முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்த வருகிறார். திரிஷாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

Read more about: trisha jiiva திரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X