ரஜினி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்த த்ரிஷா?
சென்னை: லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட த்ரிஷா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வரும் படம் லிங்கா. மைசூரில் துவங்கிய படப்பிடிப்பு அதையடுத்து ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது.
80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

ஷிமோகா
மீதமுள்ள காட்சிகள் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிபப்புக்காக மங்களூர் விமான நிலையம் வந்த ரஜினிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

த்ரிஷா
த்ரிஷா தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் ஆசை உள்ளது என்று அவ்வப்போது கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்டு
லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட த்ரிஷாவிடம் கேட்டார்களாம். ஆனால் அவர் பிசியாக இருப்பதால் வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.

இல்லை
லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுமாறு யாரும் என்னை கேட்கவும் இல்லை, நான் மறுக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











