சினிமாவில் நான் 10 வருஷம் எப்படி தாக்குப் பிடிச்சேன் தெரியுமா?: த்ரிஷா
சென்னை: த்ரிஷா தான் திரையுலகில் 10 ஆண்டுகள் தாக்குப் பிடித்ததன் ரகசியத்தை தெரிவித்துள்ளார்.
த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். ஆனால் இன்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று பலரும் வியந்து வருகின்றனர்.
இந்நிலையில் த்ரிஷா தனது திரையுலக வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார்கள் மட்டும் போதாது
சினிமாவில் நிலைத்து நிற்க பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் மட்டும் போதாது என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

வெரைட்டி வேண்டும்
பல வகையான கதாபாத்திரங்களில் நடித்தால் தான் திரையுலகில் நீடிக்க முடியும் என்கிறார் த்ரிஷா. அப்படி நடித்ததால் தான் இன்றும் தன்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அஜீத், விஜய் என்றால் ஓகே
ஒரே நடிகருடன் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். அதனால் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டும். ஆனால் நல்ல கதையாக இருந்தால் அஜீத், விஜய்யுடன் மீண்டும் மீண்டும் நடிக்க தயார் என்று த்ரிஷா கூறினார்.


Click it and Unblock the Notifications











